தேர்தல் அறிக்கையை பொறுப்பேற்கும் சட்டங்களில் மலேசியக் கட்சிகள் தயக்கம்
During a BBC debate, Malaysian government and opposition representatives showed little interest in enacting laws to hold political parties accountable for their election manifestos.

Dated: 11.6.2025 Time: 2.10 pm By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா
நேற்று இரவு நடைபெற்ற BBC விவாத நிகழ்ச்சியில், தேர்தலுக்காக கொடுக்கப்படும் கொள்கை அறிக்கைகளுக்கு அரசியல் கட்சிகளைக் பொறுப்பாக்கும் சட்டங்களை இயற்றுவதில் அரசு தரப்பிலும், எதிர்க்கட்சித் தரப்பிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
பிகேஆர் பொதுச் செயலாளரான ஃபுசியா சாலே கூறுகையில், கடந்தகால தேர்தல் அறிக்கைகள் அளவுக்கு அதிகமான வாக்குறுதிகளை அளித்திருக்கலாம் என்பதனை ஏற்றுக் கொண்டார்.
ஒரு நாட்டை எப்படி நடத்துவது என்பது எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு கண்ணோட்டத்திலும், அரசாங்கத்தில் இருக்கும்போது வேேறொரு கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டிய சூழல் இருப்பதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான துணை அமைச்சரான ஃபுசியா கூறினார்.
ஆகவே, இந்த முறை வரும் தேர்தல் அறிக்கைகளில் மிகவும் தாங்கள் மிகவும் கவனமாக இருக்கப் போவதாக, கடந்த செவ்வாய்க் கிழமையன்று இரவு நடைபெற்ற BBC World Questions விவாதத்தில் பங்கேற்றபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நன்றி. என்எஸ்டி