அதிகாரிகள் பதவி விலக வேண்டும். ஃபட்லினா
Officials should resign.

Date : 01 May 2025 News By: Ganapathy
மலேசியக்கொடி விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சின் இயக்குநர், ஜெனரல்,தேர்வு வாரியம் ஆகியவை உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Maslee Malek கூறியதை கல்வியமைச்சர் Fadhlina Sidek நிகராரித்தார்.
இதன் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசயத்தில் நடவடிக்கைக எடுப்பதற்கு தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்
.
பள்ளிகளில் (STEM) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் பாடங்களை எடுக்கும் மாணவர்களின் வீழ்ச்சியினால், எதிர்காலத்தில் மருத்துவ மாணவர்களின் எண்ணிகையில் ஒரு தாக்கத்தை ஏற்பட்டு விடும் என்று கவலையை தெரிவித்த கல்வி அமைச்சர் ஃ பட்லினா, இதனை நிவர்த்திச் செய்யும் வகையில், வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களின் கல்வி ஆற்றலை உயர்த்தவும் அமைச்சு முடிவெடுத்துள்ளதை குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளைனவிட, இவ்வாண்டு 14,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ எடுத்திருந்தாலும், அறிவியல் பிரிவில் ஆர்வம் குறைந்துள்ளது என்றும், அதேபோல் படிவம் 6 மாணவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது என்றும் ஃபட்லினா கூறினார்.
www.myvelicham.com