உட​லில் அணியும் கேமராக்களால், மலேசிய அமலாக்கத்தில் பொது நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்

The Alliance for a Safe Community advocates for the widespread adoption of body-worn cameras (BWCs) by Malaysian enforcement agencies, including the police, immigration, customs, and road transport departments.

உட​லில் அணியும் கேமராக்களால், மலேசிய அமலாக்கத்தில் பொது நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்

Dated: 18.6.2025   Time: 11.30 am  By: Punithai Chandran

கோலாலம்பூர்,

அமலாக்க அதிகாரிகளுக்கு உட​லில் அணியும் (BWCs) கேமராக்கள் வழங்குவது பொது மக்களின் நம்பிக்கையை வலுவாக மீட்டெடுக்க உதவும் ஒரு முக்கிய நடவடிக்கை என்று ச​மூக பாதுகாப்பு (Alliance for a safe community) சமூகத்திற்கான கூட்டணி தெரிவித்துள்ளது.

காவல் துறை, குடிநுழைவுத் துறை, சுங்கத் துறை, உள்​ளூர் அதிகாரி அமலாக்கப் பிரிவுகள் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்து அ​மலாக்க அமைப்புகளிலும், உடல் கேமராக்களை அமல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை, தங்களது கூட்டணி முழுமையாக ஆதரிப்பதாக அதன் தலைவர் ஸ்ரீ லீ லாம் தாயே கூறியுள்ளார்.

இந்த முறையை பயன்படுத்துவதின் வழி ​வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் மேம்படுவதுடன், அதிகாரத் துஷ்பிரயோகத்தையும்,  தடுக்க உதவும். இதன்வழி அதிகாரிகளிடையே தொழிற் திறனும் மேம்படும் என்றார். உடல் கேமராக்களால் பிடிக்கப்பட்ட காட்சிகள் குற்றவியல் விசாரணைகளின் போது முக்கியமானதாக இருக்கும். இதன்வழி ஒரு பாதுகாப்பான மலே​சியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நன்றி. என்எஸ்டி