இளசுகளிடம் குளிர்பானம் அருந்துவது ஃபேஷன் கல்லீரல் செயலிழப்பு உண்டாகும்

arise from cold drinks.

இளசுகளிடம்  குளிர்பானம் அருந்துவது ஃபேஷன் கல்லீரல் செயலிழப்பு  உண்டாகும்

Date :20 July 2025 Time ;1.35pm News By: Ganapathy

சர்க்கரை அதிக அளவில் உள்ள கார்பனேட்டட் குளிர்பானம் அருந்துவதுதான் ஃபேஷன் என்ற எண்ணம் இளசுகளிடம் உள்ளது. சாப்பாட்டின் போது குறிப்பாக அசைவ உணவின் போது தண்ணீருக்கு பதிலாக கார்பனேட்டட் குளிர்பானத்தை அருந்துவது பலருக்கும் விருப்பமான விஷயம். குளிர்பானம் அருந்துவது ரத்தத்தில் சர்க்கரை அளவை தாறுமாறாக அதிகரிக்கச் செய்துவிடுகிறது.

சோடா வகை குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு குளிர்பானம் அருந்துவது கூட ஒரு நாள் கலோரியில் 17 சதவிகிதம் அதிகரிக்கச் செய்துவிடுகிறது. ஒன்றுக்கும் மேல் அருந்தினால் அதிகப்படியான சர்க்கரை உடலில் சேர்கிறது. இப்படி அதிக அளவில் சேரும் சர்க்கரை உடலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

குளிர்பானங்களில் கார்ன் சிரப் சேர்க்கப்படுகிறது. இது ஃபிரக்டோஸ் வகை சர்க்கரையாகும். குளுக்கோஸை நம்முடைய உடல் செல்கள் பயன்படுத்தும். ஆனால் ஃபிரக்டோஸ் பயன்படுத்தப்படும் ஒரே இடம் கல்லீரல்தான். அதிகப்படியான ஃபிரக்டோஸை கொழுப்பாக கல்லீரல் மாற்றி கல்லீரல் மற்றும் உடலின் பல பகுதிகளில் சேகரித்து வைக்கிறது. தொடர்ந்து கல்லீரலில் கொழுப்பு சேகரித்து வைக்கப்படுவது கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதிகப்படியான கொழுப்பைக் கல்லீரல் உற்பத்தி செய்யும்போது அது வயிற்றுப் பகுதியில் சேகரிக்கப்படுகிறது. இதனால் தொப்பை ஏற்படுகிறது. இதன் காரணமாக டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

இன்சுலின்தான் நம்முடைய உடல் செல்கள் குளுக்கோஸை பயன்படுத்து திறவுகோலாக உள்ளது. ரத்தத்தில் சேரும் அதிகப்படியான சர்க்கரை இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் கணையம் அதிக அளவில் இன்சுலின் சுரக்கத் தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. இந்த நிலைக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்று பெயர்.

கார்பனேட்டட் குளிர்பானங்களில் வைட்டமின், தாது உப்புக்கள், நார்ச்சத்து என எதுவும் இல்லை. சர்க்கரை மட்டுமே உள்ளது. இது தேவையற்ற கலோரியை மட்டுமே அதிகரிக்கச் செய்கிறது.

குளிர்பானங்களை மக்கள் அதிகம் அருந்த வேண்டும் என்பதற்காக சில சுவையூட்டிகள் அடிமையாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படலாம். ஒரு பிரபல குளிர்பானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தில் ஆல்கஹால் கலக்கப்படுவதாக முன்பு செய்தி வெளியாகி இருந்தது. அது உண்மையா பொய்யா என தெரியவில்லை. குளிர்பானம் அருந்தினால் புத்துணர்வு கிடைத்தது போன்ற உணர்வு பலருக்கும் வரும். இது எல்லாம் அதில் சேர்க்கப்படும் ரசாயனத்தால் தான்.

அதிகப்படியான சர்க்கரை கொழுப்பாக மாற்றப்படுகிறது. இதனால் சர்க்கரை நோய், ரத்தத்தில் டிரை கிளசரைட், எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு அளவு போன்றவை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

குளிர்பானங்களில் கொட்டப்படும் சர்க்கரை மற்றும் பாஸ்பாரிக் அமிலம், கார்பானிக் அமிலம் ஆகியவை பற்களை பாதிக்கின்றன. இவை பல்லின் எனாமலை பாதித்து பற்கூச்சம், சொத்தை போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

 

உண்டாகும்