2024ஆம் ஆ​​​ண்டுக்கான STPM 2024 தேர்வு முடிவுகள் ஜூன் 24 அன்று வெளிவரும்

The 2024 Sijil Tinggi Persekolahan Malaysia (STPM) examination results will be released on June 24

2024ஆம் ஆ​​​ண்டுக்கான  STPM 2024 தேர்வு முடிவுகள் ஜூன் 24 அன்று வெளிவரும்

Dated: 17.6.2025   Time: 6.40 pm  By: Punithai Chandran

பெட்டாலிங் ஜெயா,

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் (STPM) தேர்வு முடிவு எதிர்வரும் ஜூன் 24 ஆம் தேதி வெளிவர உள்ளது என்று மலேசிய தேர்வு கவுன்சில் (MPM) தெரிவித்துள்ளது. இந்த முறை 41,434 மாணவர்கள் 670 மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.

மாணவர்கள் இரண்டு வழிகளில் தங்கள் முடிவுகளைச் சரிபார்க்கலாம்,

முதலாவது, சுருக்கமான முடிவுகளை 15888 என்ற எண்ணுக்கு "STPM (இடைவெளி) அடையாள அட்டை எண் (இடைவெளி) தேர்வு எண்" என்ற வகையில் SMS அனுப்புவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம்.  

இரண்டாவது, முழுமையான முடிவுத் தாள்களுக்கு, மாணவர்கள் அதே நாளில் காலை 11.30 மணி முதல் stpm.mpm.edu.my/stpmK என்ற இணையதளத்தில் உள்நுழைந்து முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த சேவை ஜூன் 24 ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி நண்பகல் வரை வழங்கப்படும்.

நன்றி. எஃப்எம்டி