மை வெளிச்சம் .கோம் 15-ம் ஆண்டு கடந்துள்ளது.
myvelicham.com

Date:23July 2025 Time :4.30 Newsby:Ganapathy krishnasamy
மை வெளிச்சம் மீடியா 15 ஆண்டுகளை கடந்துள்ளது. இதற்காக அண்மையில் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்களோடு தங்கும் விடுதியில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலக பண்பாட்டு இயக்கத் தலைவர் டத்தோ. டாக்டர். கோபாலகிருஷ்ணன், மலேசியா ஆய்வாளர் ஆர். கே. ரமணி கிருஷ்ணன் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், ராஜரங்கன், தொழிலதிபர் தேவி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு தங்களது முழுமையான தங்களது வற்றாத ஆதரவை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பேசிய டாத்தோ. டாக்டர். கோபாலகிருஷ்ணன், "வெளிச்சம் மீடியா என்பது சாதாரண விஷயம் அல்ல. கல்வி, பொருளாதாரம், சமுதாயம் என வெளிச்சம் மீடியாவின் கட்டுரைகள் 3 நிலைகளில் சிறப்பாக அமைந்துள்ளது" என புகழாரம் சூட்டினார்.
இதைத்தொடர்ந்து பேசிய 'மை வெளிச்சம்' நிறுவனர் கணபதி கிருஷ்ணசாமி, "கடந்த 15 ஆண்டுகளில், இணையதளமே இல்லாத ஒரு காலகட்டத்தில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த 15 ஆண்டு பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது பல எழுத்தாளர்கள், நம்முடன் பணிபுரிந்த பல நண்பர்களை இழந்துள்ளேன்.முக்கியமாக ஆதி இராஜகுமரன் மறைவு அவர் தான் எனக்கு குரு நாதர் என்னுடைய ஆசான் இணையம் என்று பெயர்சூட்டியவர். 15 ஆண்டுகளா? கடந்து விட்டது என்று நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ன்று கல்வி, பொருளாதாரம், சமுதாயம் என்ற பார்வையில் இந்த 'மை வெளிச்சம்' தளத்தை, மிக அற்புதமாக, பல தமிழர்கள் இன்று, 16 நாடுகளில் இருந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு வருகை தந்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் கூறிக் கொள்கிறேன்" என்றார்.