ரேபிட் கே.எல்.-இன் வேன் சேவை தொடங்கப்பட்டது.
van service of Rapid KL has been launched.

Date : 23 July 2025 Time 4.00pm News By:Ganapathy
ரேபிட் கே.எல்.-இன் கோரிக்கைப்படி இயங்கும் வேன் சேவை, தற்போது சிலாங்கூரின் ஷா ஆலம் மற்றும் கிளாங் உள்ளிட்ட 12 புதிய மண்டலங்களில் விரிவடைந்துள்ளது.
'பிரசரணா மலேசியா பெர்ஹாட்' நிறுவனத்தின் துணை நிறுவனமான Rapid Bus Sdn Bhd' கடந்த 17ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "
பெர்சியாரன் டத்தோ மென்தேரி - கே.டி.எம் ஷா ஆலம், கே.டி.எம் பாடாங் ஜாவா - டெர்மினல் 17, கே.டி.எம் பாடாங் ஜாவா - பிரிவு 7, U12 ஆலம், பண்டார் பாரு கிளாங், கே.டி.எம் கிளாங் - , டேமன் சம்மிட், கே.டி.எம் கிளாங் - தெலுக் கடோங், ஸ்ரீ அண்டலாஸ், கிளாங் ஜெயா, பண்டார் புகிட் திங்கி, பண்டார் பேஸ்த்தாரி ஆகிய பகுதிகளில் இந்த 'Rapid KL' வேன் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிவித்தபடி கடந்த 18ம் தேதி இந்த வேன் சேவை தொடங்கப்பட்டது. அப்போது பேசிய, பிரசரணா குழுமத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி அமீர் ஹம்தான், இந்த முயற்சி வெறும் பாதைகளை விரிவுபடுத்துவது மட்டும் அல்ல. மாறாக, ஒவ்வொரு நகரவாசிக்கும் சமவாய்ப்பு, பொருத்தமான போக்குவரத்துச் சேவையை உறுதி செய்யும் நோக்கத்துடன் செய்யப்படும் நடவடிக்கை” என தெரிவித்தார்
இது குறித்து அந்நிறுவனம் சார்பில், 'டெசா பிங்கிரான் புத்ரா - கெமிலாங் புத்ராஜெயா சேவை மண்டலமானது, MRT புத்ராஜெயா சென்ட்ரல் - PICC பாதையுடன் இணைக்கப்படும். இதன் புதிய பெயராக “MRT Putrajaya Sentral - PICC மற்றும் Desa Pinggiran Putra” என்று மாற்றப்படும். இது ஒருங்கிணைந்த மற்றும் விரிவான சேவையை வழங்கும் வகையில் அமையும்' என உறுதி செய்யப்பட்டுள்ளது.
'Rapid KL' வேன் சேவை, காலை 6:00 மணி முதல் இரவு 11:30 மணி வரை கிடைக்கின்றது. மேலும், சேவையை ஊக்குவிக்கும் வகையில், ஒரு பயணத்துக்கு விருப்ப விலையாக RM1.00 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயணங்களை முன்பதிவு செய்ய, Rapid On-Demand செயலியை Google Play Store மற்றும் Apple App Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
மேலும் தகவல்களுக்கு, சேவை மண்டலங்கள் மற்றும் பயனர் வழிகாட்டிகள் தொடர்பான விவரங்களை காண விருப்பமுள்ளவர்கள், myrapid.com.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் அல்லது Rapid KL சமூக ஊடக பக்கங்களையும் பார்க்கலாம்