அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உள்ளூர் பழங்களுக்கு வரி விலக்கு
The Malaysian Finance Ministry clarifies that the 5% sales tax under the expanded Sales and Service Tax (SST) will not apply to selected imported basic foods like rice, sugar, and meat, nor to locally grown fruits and cooking palm oil.

Dated: 11.6.2025 Time: 4.03 pm By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
விரிவாக்கம் பெற்றுள்ள விற்பனை மற்றும் சேவை வரியின் (SST) கீழ் உள்ள 5% சதவிகிதம் விற்பனை வரியானது, இறக்குமதி செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உள்நாட்டில் விளையும் பழங்களுக்குப் பொருந்தாது என்று நிதி அமைச்சகம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
இதில் இரண்டு வகையிலான பொருட்கள் உள்ளன. அதாவது விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் 5% சதவிகிதம் வரி விதிக்கப்படும் பொருட்கள் என இரண்டு வகை பொருட்கள் உள்ளன. இந்த இரண்டு பட்டியல்களில் சேர்க்கப்படாத பொருட்களுக்கு 10% சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, உப்பு மற்றும் இறைச்சி போன்ற இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் செம்பனை எண்ணைக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கவும், மலேசியர்களுக்கு சில சேவைகளுக்கு வரி விதிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இந்த விரிவாக்கத்துடன் சில விலக்குகளும் இருக்கும் என்றும் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அஸிஸான் கூறியுள்ளார்.
நன்றி. எஃப்எம்டி