பினாங்குக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
The number of Chinese tourist arrivals in Penang has increased by 218.86% compared to the previous year. This is attributed to digital promotions and state government initiatives. China remains Penang's primary tourism market. There are seven new direct flight routes between China and Penang. N

Dated: 22.5.2025 Time: 2.30 pm By: Punithai Chandran
ஜார்ஜ் டவுன்,
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், சீனாவிலிருந்து வரும் சுற்றுப் பயணிகளின் வருகை 218.86% சதவிகிதம் உயர்ந்திருப்பதாக மாநில சட்டமன்றத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய் தெரிவித்தார். இது டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் மற்றும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகும் என்றார்.
சீனா, தொடர்ந்து நமது மாநிலத்திற்கு முதன்மை சுற்றுலாச் சந்தையாக உள்ளதை இது நிரூபிக்கின்றது என்று ஓங் ஆஹ் தியோங் (டிஏபி-பத்து லாங்சாங்) கூறினார்.
மேலும் சீனாவுக்கும், பினாங்குக்கும் இடையே ஏழு புதிய விமான நேரடி வழித் தடங்கள் உள்ளன. மேலும் பாரம்பரிய உடைகளை அணிந்து பிரபலமான இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ‘கெபாயா சுற்றுலா’ மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ‘டுரியான் சுற்றுலா’ போன்றவை புதிய சுற்றுலாத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022, 2034 ஆண்டுகளை விட, கடந்தாண்டு (2024) பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு சீன நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 120,245 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.myvelicham.com நன்றி. மலாய் மெயில்.