வினிர்சா ஹரி ஹரன் சென்னையில் முதல் சர்வதேச ஸ்குவாஷ் பட்டத்தை வென்றார்

Kuala Lumpur's 10-year-old Vinirsha Hari Haran made her parents proud by winning her first international title, the Girls U-11 category

வினிர்சா ஹரி ஹரன் சென்னையில் முதல் சர்வதேச ஸ்குவாஷ் பட்டத்தை வென்றார்

Dated: 9.6.2025    Time: 11.00 am     By: Punithai Chandran

கோலாலம்பூர்:

நேற்று சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் கலந்து கொண்ட கோலாலம்பூரைச் சேர்ந்த வினிர்சா ஹரி ஹரன் சர்வதேச போட்டியில் கலந்து U-11 பட்டத்தை வென்று, அவரது பெற்றோர்களான ஹரி ஹரன் கர்ணாநிதி மற்றும் அவரது மனைவி சரஸ்வதி கிருஷ்ணன் ஆகியோருக்கு பெருமை​யைத் தேடித் தந்துள்ளார்.

இது அவரது முதலாவது சர்வதேசப் பட்டமாகும்.

பத்து வயது சிறுமியான வினிர்சா ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில், இறு​திப் போட்டியில் சகநாட்டு வீராங்கனையான சஷானா இஸ்தி​ரிதரனை 1-11, 11-13, 11-7, 11-9, 11-9 என்ற எண்ணில் தோற்கடித்தார். இந்த அரையிறுதிப் போட்டியில் வினிர்சா இந்தியாவைச் சேர்ந்த  சமீக்ஷா சுகுமாரையும், காலிறுதியில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான அருணிமா சௌபேயையும் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

இந்த வயதில் தான் அடைந்துள்ள இந்த வெற்றியை பெரிய சாதனையைக் கருதுவதாகவும், தானும் ஒரு நாள் உலக சாம்பியனாக வர வேண்டுமென்று விரும்புவதாகவும் வினிர்சா கூறினார்.

நன்றி ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ்