மலேசியாவின் தொடர்  வர்த்தக மேம்பாட்டுக் கருத்தரங்கம்

Continuing Trade Development Forum of Malaysia

மலேசியாவின் தொடர்  வர்த்தக மேம்பாட்டுக் கருத்தரங்கம்

Dated: 23.5.2025    Time: 4.00 pm   By: Punithai Chandran

மலேசியாவின் தொடர்  வர்த்தக மேம்பாட்டுக் கருத்தரங்கம்  கோலாலம்பூரில் முதலாவது tlac SEA Connect கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள Transport Logistic மற்றும் Air Cargo Southeast Asia 2025 நிகழ்வுக்கான ஒரு நுண்ணறிவு நடவடிக்கையின் தொடக்கமாகும். 

இக்கருத்தரங்கில், எல்லை தாண்டிய வர்த்தகம், சவால்கள், மாறிவரும் நிலப்பரப்பு போன்றவை குறித்தும், இவைகளில் உள்ள பல வாய்ப்புன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும் ஜேசன் தோமஸ் (MAB Cargo) மற்றும் Port of Tanjung Pelepas) ஆகியோரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்த அமர்வில், மலேசியாவின் தளவாடப் பொருட்கள், சரக்கு மற்றும் கப்பல் ஆகிய துறைத் தலைவர்களும் கலந்துச் சிறப்பித்தார். 

MATTRADE ஆதரவில் நடைபெற்ற இக்கருத்தரங்கு உலகளாவிய வர்த்தகத்திற்கான ஊக்கமளிக்கக்கூடிய கருத்துக்களை டத்தோ ஷம்சுல் இப்ராஹிம் (MIDA) பகிர்ந்துக் கொண்டது பாராட்டும் வகையில் இருந்தது. . 

எதிர்வரும் அக்டோபர் மாதம் இததேபோன்ற கருத்தரங்கும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.myvelicham.com