RON95 எரிபொருள் மானியத்தை நிதி அமைச்சிடம் ஒப்படைக்கும்

Malaysia's long-anticipated rationalisation of the RON95 fuel subsidy

RON95 எரிபொருள் மானியத்தை நிதி அமைச்சிடம்   ஒப்படைக்கும்

Dated: 20.5.2025   Time: 6.00 pm  By: Punithai Chandran

கோலாலம்பூர்,

நீண்டகாலமாக எதிர்பார்த்த RON 95 மானியத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையை வி​ரைவாகச் செயல்படுத்தும் அதிகாரத்தை, பொருளாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக, (MoF) நிதி அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது. இனிமேல் நிதி அமைச்சின் நேரடி கட்டுப்பாட்டில் இது இருக்கும் என்றும், இது இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்றும்  பொருளாதார அமைச்சர் ஷம்ஸூடின் அண்மையில் தெரிவித்தார்.

.

எரிபொருளுக்கான மானியங்களை சீரமைப்பதன் ​மூலம் கிடைக்கும்  சேமி​ப்பைக் கொண்டு மக்களின் நலன் திட்ட மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். குறிப்பாக, 85% சதவிகித மலேசியர்கள் இந்த முயற்சியால் பாதிக்கப்பட மாட்டார்கள். இதன்வழி அரசாங்கத்திற்கு RM8 பில்லியன் சேமிப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் ஷம்ஸூடின் தெரிவித்தார். 

www.myvelicham.com நன்றி. என்.எஸ்.டி