பண்டார் பாரு பாங்கியில் தொழிற்சாலை பேருந்து விபத்தில் 33 வெளிநாட்டு தொழிலாளர்கள் காயம்
A factory bus overturned in Bandar Baru Bangi, Selangor, injuring 33 foreign workers.

Dated: 5.6.2025 Time: 12.45 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்
இன்று காலை தொழிற்சாலை பேருந்து ஒன்று, இன்று காலை கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. பண்டார் பாரு பாங்கி, செக்சன் 13, ஜாலான் P/6-இல் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 33 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இன்று காலை 6.59 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு 13 வீரர்கள் மற்றும் மூன்று அவசரகால வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
காயமடைந்த தொழிலாளர்களில் எட்டு பேர் மேல் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்கும், செர்டாங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர் என்றும், மீதமுள்ளவர்கள் சுகாதார அமைச்சகத்தின் ஆம்புலன்ஸ் பணியாளர்களால் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர் என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பேருந்தில் இருந்த பதினொரு தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர்.
நன்றி. எஃஎம்டி.