மலேசியப் பொதுப் போக்குவரத்துத் தலைமைகளில் அரசியல்வாதிகளை விட நிபுணர்களுக்கு முன்னுரிமை

Transport Minister Anthony Loke emphasizes the government's commitment to appointing experts and professionals, not political figures, to lead public transport agencies like Prasarana.

மலேசியப் பொதுப் போக்குவரத்துத் தலைமைகளில் அரசியல்வாதிகளை விட நிபுணர்களுக்கு முன்னுரிமை

Dated: 5.6.2025  Time: 1.40 pm   By: Punithai Chandran

பொதுப் போக்குவரத்துக்களின் ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசியல் தலைவர்களை விட, நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை அரசாங்கம் நியமிப்பதைத் தொடர வேண்டுமென்று போக்குவரத்து அமைச்சர் ​அந்தோணி லோக் கூறினார்.

பொதுப் போக்குவரத்து இயக்குநர்களில் அரசியல் நியமனங்கள் இருக்கக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு. இதற்கு தொழில் வல்லுநர்களை நியமிக்கும்போது வெளிப்படையாக நிர்வாகத்தை உறுதிச் செய்ய முடியும் என்றார். நிறுவனங்களை வழிநடத்துவதற்கு தாங்கள் ஏற்கனவே தொழில் வல்லுநர்களையும், அனுபவம் வாய்ந்தவர்களையும் நிமியத்தபோது, பல குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், மேம்பாடுகளையும் கண்டுள்ளதாக நேற்று மினாரா பிரசரனாவில் நடைபெற்ற மலேசியா மதானி அறிவுசார் மன்றத்தின் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, பிரசரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana)  நிபுணத்துவத் தொழில்முறை தலைமையில் மேற்கொள்ளப்படும் செயல் திறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்த சேவையைக் காட்டுள்ளதாக லோக் மேலும் தெரிவித்தார்.

நன்றி. ​பெர்னாமா