Aidiladha பண்டிகைக்கு PLUS நெடுஞ்சாலை சலுகை

PLUS Malaysia Berhad advises highway users to plan their journey

Aidiladha பண்டிகைக்கு PLUS நெடுஞ்சாலை சலுகை

Date: 31.5.2025  Time: 3.00 pm  By: Punithai Chandran               

எதிர்வரும் ​ஜூன் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள Aidiladha பண்டிகையை முன்னிட்டு ஜூன் 5 - 6 ​தேதிகள் மற்றும் ஜூன் 8 - 9 தேதிகளில் PLUS நெடுஞ்சாலைகளில் தினசரி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாகனம் செல்லும் என்று PLUS நிறுவனம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

அதனால், போக்குவரத்து நெரிசல், போக்குவரத்தை பரவலாக்குதல் மற்றும் வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவித​ல் போன்றவற்றினைத் தடுக்கும் வகையில், MyPLUS-TTA டிஜிட்டல் பயண அட்டவணையை PLUS செயலி ​மூலம் நிறுவனம் வழங்கியுள்ளதாக PLUS தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

எனவே, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புகின்றவர்கள், MyPLUS-TTA டிஜிட்டல் பயண அட்டவணையைப் பின்பற்றி முன்கூட்டியே தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு PLUS கேட்டுக் கொள்கிறது.

மேலும், சீரான வாகன போக்குவரத்திற்காக. பச்சை​ நிற  விளக்குகள் மற்றும் சிவப்பு அடையாளப் பலகைகள் 30 இடங்களில் Smart Lane-னையும் PLUS செயல்படுத்தவுள்ளது. இந்த வழித்தடங்களை இலகுரக, தனியார் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பொதுமக்கள் PLUS செயலி, PUTRI (Virtual Assistant), X@plustrafik, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உள்ள மின்னணு அறிவிப்பு பலகைகள் (VMS) மூலம் போக்குவரத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவசர உதவிக்கு, PLUSLine 1800-88-0000 அல்லது LPT2Line 1800-88-0220 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் PLUS அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.