சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் நிறுவனங்களின் உரிமம் ரத்து

The JPJ has urged the Land Public Transport Agency (APAD) to revoke the licenses of transport companies that fail to ensure the safety of their vehicles.

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் நிறுவனங்களின் உரிமம் ரத்து
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் நிறுவனங்களின் உரிமம் ரத்து

Date: 31.5.2025      Time: 1.40 pm        By: Punithai Chandran               

சாலை போக்குவரத்துத் துறை (JPJ) வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் எந்தவொரு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்துச் செய்யுமாறு நிலப் போக்குவரத்து ஏஜென்சியை (APAD) வலியுறுத்தியுள்ளது

.

மோட்டார் வாகன உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறியது,  செல்லுபடியாகும் காப்பீட்டு பாதுகாப்பு இல்லாமல் ஓட்டுவது,  மற்றும் புஸ்பாகோம்மில் கட்டாய ஆய்வுகளை புறக்கணிப்பது, லாரி மற்றும் கனரக வாகனங்களின் வழக்குகள் அதிகரித்துக் கொண்டிருப்பது ஆகியவற்றுக்கு எதிராக இந்த அறிவிப்பு வந்துள்ளது என்று JPJ அமலாக்க இயக்குநர் முகமது கிஃப்ஸி மாட் ஹசான் கூறினார்.

கடந்த வாரம் JPJ வெளியிட்ட தகவலின்படி, போக்குவரத்துத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட கனரக வாகன வகையைச் சேர்ந்த, டிப்பர் லாரிகளே அதிகம் எனவும் தெரிய வந்துள்ளது. அந்த வகையில், கடந்த இரு ஆண்டுகளுக்கிடையில் இரண்டு ஆண்டுகளாக JPJ  3,061 லாரிகளை பறிமுதல் செய்துள்ளது என்றும் முகமது கிஃப்ஸி மாட் ஹசான் தெரிவித்தார்.

www.myvelicham.com /face book / Tik ToK