தமிழ் மலர் நிருபர் மேத்யூஸ் டிஜேஎன் விருது பெற்றார்
Tamil Malar reporter Matthew has won the DJN award.

Date ;17 August 2025 Time: 7.45pm NewsBy: Methies
ஜோர்ஜ் டவுன், ஆக 17-
மலேசிய தமிழ் பத்திரிகை துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பினாங்கு மாநில தமிழ் மலர் நிருபர் மேத்யூஸ் அவர்கள் டிஜேஎன் விருது பெற்றுள்ளார்.
பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமுதாயத்தின் நலன் கருதி அவர் பல செய்திகளை எழுதியுள்ளார்.
சமுதாய சேவையிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவருக்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் மனதார வாழ்த்துகிறது.