முதல் முறையாக BBC-யின் World Questions நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது
BBC’s World Questions comes to Malaysia for the first time, highlighting the country's growing press freedom and democratic maturity.

Dated: 10.6.2025 Time: 12.00 pm By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
உலகளாவிய பதிப்பினைக் கொண்ட, இங்கிலாந்து நாட்டில் நீண்ட நாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் BBC-யின், “World Questions” என்ற தலைப்பில், பொது மக்களின் முன்னிலையில் ஒரு விவாத நிகழ்ச்சியாக இன்று பெட்டாலிங் ஜெயாவில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறுவது ஊடக சுதந்திரம் வளர்ந்து வருவதையும், அதன் ஜனநாயக முதிர்ச்சியைக் காட்டுவதாகவும் உள்ளது என்று BBC-யில் மூன்று தசாப்தங்களாக பணியாற்றி வரும் சார்லி டெய்லர் கூறினார்.
இந்த விவாதம் மலேசிய மக்களின் குரலை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என்றார். தாம் கடந்த சில நாட்களகாக மலேசியர்களை சந்தித்து வந்துள்ளதாவும், அவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துக் கொண்டதாகவும் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவின் சுதந்திரம் அதிகரித்திருப்பதாக தாம் கருதுவதாகக் கூறினார்.
மலேசியா ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடாக மாற விரும்புகின்றது என்றும், இதுபோன்ற வளர்ச்சிக்கு பேச்சு சுதந்திரம் முக்கியம் என்றும் சார்லி டெய்லர் கூறினார்.
இந்த விவாத மேடையில், பொதுமக்கள், தேசிய மற்றும் உலகப் பிரச்சினைகள் குறித்த அரசியல் மற்றும் பொது தலைவர்களிடம் கேள்வி எழுப்பலாம். விவாதக் குழுவில் அமைச்சர்கள், கல்விமான்கள் கலந்துக் கொள்வார்கள்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தாங்கள் இந்நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும், ஆண்டுக்கு 12 நிகழ்ச்சிகளை தாங்கள் நடத்தி வருவதாகவும், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி. எஃப்எம்டி
Top of Form