"இசையை வளர்ப்போம் இன்பம் காப்போம்" டத்தோ கே. புருஷோத்தமன்

“If the nation and language are our two eyes, then music is their light.”

Date: 28 May 2026 News By: Maliga supiah 

"நாடும் மொழியும் நமக்கு இரு கண்கள் என்றால் இசையோ அதன்   ஒளி"

 சில கலைஞர்களின் அன்பு  வேண்டுகோளுக்கு இணங்க
காலங்கள் கடத்தாலும் நம் நெஞ்சங்களை ஆளும் காந்த குரலுக்கு ஒரு நன்றி காணிக்கை செலுத்த   
டத்தோ கே. புருஷோத்தமன் அவர்கள் தலைமையில், ஸ்ரீராகம் மியூசிக்  கல்லூரி  உரிமையாளர்  திருமதி  விமலா ஸ்ரீ எடுத்து நடத்திய மிகப் புனிதமான, பிரம்மாண்டமான ஒரு நிகழ்ச்சி கடந்த 24. 5. 2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் நடந்து முடிந்தது. 

இதில் சிறப்பு விருந்தினர்கள்   "ரேக்கா கேலக்ஸி"  உரிமையாளர்
திரு திருமதி மணிகண்ட பிரபு , மறைந்த கலைஞர் அமரர் திரு தமிழ்திரு அவர்களின் துணைவியார் ஆசிரியர் திருமதி தனலட்சுமி, அருன் சேனல் புகழ் 
திரு அருன் அவர்களின் துணைவியார் திருமதி லீனா   அருன் மற்றும் கலைஞர்கள் உட்பட  சுமார் 70 பேர் கலந்து சிறப்பித்தனர்.
கலை மீதும் கலைஞர்கள் மீதும்  பாசமும் பற்றும் கொண்டவர்,  தன் கண்ணுக்குத் தெரியாமல்  இதுவரை இருந்த  நம் மூத்த கலைஞர்களின் நிலைக்கண்டு மனம் உடைந்து போனார் டத்தோ.  கலை என்பது வெறும் பொழுது போக்கல்ல அது நமது பண்பாட்டின் ஆன்மா .. அதை நமக்கு கொடுக்கும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தான் கண்டிப்பாக  கரம் நீட்டுவார் என்று தெரிவித்தார்.. 
இது தெரிந்து தான் என்னமோ.. கலைஞர் ஒருவர் நிகழ்ச்சியின் தொடக்கப் பாடலாக.. புல்லாங்குழல் கொடுத்த  மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே என்று தொடக்கி வைத்தார். எவ்வளவு உண்மை பார்த்தீர்களா.. 

 இளமையும் முதுமையும் மேடையில் கைகோர்த்துப் படைத்த நிகழ்வுகள்  யாவும் கண்கொள்ளாக் காட்சி.  

 

 - மல்லிகா சுப்பையா-