தொழிலாளர் தின 6ஆம் ஆண்டு குடும்பத்தின விழா
Labour Day 6th Annual Family Festival

Date : 02 May 2025 News By : Segaran
வியாழக்கிழமை தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு ஜோகூர் பாரு சமூக நல பயணிட்டாளர் சங்கம் 6ஆம் ஆண்டு குடும்பத்தின விழாவை மிகவும் விமர்சியாக கொண்டாடியது
.
பல்வேறு கலை கலாச்சார விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பூக்கட்டும் போட்டி சட்டி உடைக்கும் போட்டி கயிறு இழுக்கும் போட்டி தோரணம் பின்னும் போட்டி சிறுவர்களுக்கான மாறுவேட போட்டி வண்ணம் தீட்டும் போட்டி பலூன் ஊதும் போட்டி கபடி இப்படி பல்வேறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் சுகாதார பரிசோதனை முகாம் குதிரை சவாரி காப்புருதி திட்டம் மற்றும் வருகை புரிந்தோருக்கு மைலோ நிறுவனத்தின் குளிர்பானம் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு சுற்று வட்டார பொதுமக்கள் ஏறக்குறைய 200 பேர் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக துடக்கி வைக்க தாமான் யுனிவர்சிட்டியில் நகராட்சி கழக அதிகாரி En Fakhrul Zafran bin ABSL Kamarul Azman தாமான் யூனிவர்சிட்டியின் காவல் நிலைய தலைமை அதிகாரி puteri Sub Inspektor
En Tuan Khairulanuar Bin Ahmad
yayasan Penyayang iskandar Puteri சார்பிலும் இஸ்கண்ட புத்திரியின் மா இ கா தொகுதி துணைத் தலைவர் மரியாதைக்குரிய சகோதரர் திரு சேகரன் கன்னியப்பன் பக்தி ஜெயா இயக்கத் தலைவர் டாத்தோ சரவணன் ஜோகூர் பாரு சமூக நல பயணிட்டாளர் சங்கம் தலைவர் திரு காளியப்பன் மற்றும் துணைத் தலைவர் திரு மோகன் செயலாளர் திரு ஜெகன் ராஜ் ஆகியோரின் தலைமையில் அவர்கள் குழுவினருடன் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது .
இது போன்ற குடும்ப தின விழா குடும்ப ஒற்றுமையையும் சமூகத்திலும் சமுதாயத்திலும் நமது கலை கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவே இந்த விழா வருடம் தோறும் கொண்டாடப்படுவதாக ஏற்பாட்டுக் குழு தலைவரான திரு ஜெகன் ராஜ் அவர்கள் தெரிவித்தார் மேலும்ஜோகூர் பாரு சமூக நல பயணிட்டாளர் சங்கம் ஸ்கன்டார் புத்திரி சுற்று வட்டாரத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வந்து கொண்டிருக்கிறது இந்த வகையில் பல்வேறு விதங்களில் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை இந்த இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது.
www.myvelicham.com / Face book / Tik Tok / You Tube /