மாணவர்களுக்கு தன்நாற்றல்  பயிற்சிகள் சிறந்த வழிக்காட்டியாக இருக்கும்

training sessions will be a great guide for students.

மாணவர்களுக்கு தன்நாற்றல்  பயிற்சிகள் சிறந்த வழிக்காட்டியாக  இருக்கும்

Date: 28 July 2025   Time: 2.25   News By: K.Baskaran 

தேசிய வகை ஜாலான் தெப்பி சுங்கை தமிழ் பள்ளியின் ஏற்பாட்டில்  சீருடை இயக்க முகாம்,இனிதே நடைபெற்றது, இந்த முகாமில் கலந்து கொண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி, ஜெயலெட்சுமி செழியன், சிலாங்கூர்  மாநிலத் தலைமை ஆசிரியர் மன்ற தலைவரும், கி ள்ளான் மாவட்டத் தலைமை ஆசிரியர் மன்றத்தலைவரும், தேசிய வகை தமான் செந்தோசா தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு, தமிழ்அரசு சுப்ரமணியம், கிள்ளான் மாவட்ட கல்வி இலாகாவின் துணை அதிகாரி துவான் லூபித்தி பின் முகம்மது யாசிட்,

 

சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் பாலர்பள்ளி மற்றும் ஆரம்ப  தமிழ்பள்ளிகளின் உதவி இயக்குநர் உயர்திரு மணிசேகர் சிரங்கன், பள்ளி மேலாண்மை வாரியத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு தனசேகரன், துணை தலைவர் திரு பழனிவேல் மதுரவீரன் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்கள், மற்றும் திரு பூபாலன் தர்மலிங்கம்  மற்றும்  அவர்தம் செயலவை உறுப்பினர்கள், மற்றும், பெற்றோர்கள் யாவரும் இந்த சிறப்பு  சீருடை முகாமில் கலந்து கொண்டு சிரப்பித்தர்கள்.

இது போன்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தன்நாற்றல் வெளிப்படுத்துவதற்கு  சிறந்த வழி கட்டியாக இருக்கும் என்று சிலாங்கூர் மாநில தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் தமிழ் அரசு அவர்கள் தனது சிறப்புரையில் உரையாற்றினார். நிகழ்ச்சி அறிவிப்பாளாராக திரு அ த்திக் மற்றும் திருமதி நா. கீதா சிறப்பாக நிகழ்வை வழிநடித் தினர்கள்.

News By:K.S.BASKARAN