மனநலம் குன்றியுள்ள பிள்ளைகளுடன் வாக்களிக்க வந்தத் தாய்

Mother with mentally challenged children to vote

மனநலம் குன்றியுள்ள பிள்ளைகளுடன் வாக்களிக்க வந்தத் தாய்

Date :27 APRIL 2025 NewsBy: RM Chandran  

தாப்பா, வாக்குச் சாவடியில் தனது மூன்று குழந்தைகளை பாதுகாப்பதில்  சவால்களை எதிர்கொண்ட போதிலும்,  ஆயர் கூனிங், இடைத்தேர்தலில்  தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்கு தனித்து வாழும் ஒரு தாய் தனது மூன்று மனநலம் குன்றிய குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.


53 வயதான Suzanah  Eliyas  கூறுகையில்,  15வது பொதுத் தேர்தலில் வாக்களித்த பிறகு,  தனது குழந்தைகள் Muhmad Khir Khairul  Nizam, வயது 29,   Nur Fatimah  வயது 28,  Nur Ashikin  வயது 25 ஆகியோர் ஆட்டிசம்  குறைபாடு உள்ளவர்கள் என்று கூறினார்.

இந்த வாழ்க்கை முறை தனக்கு மிகவும் சவாலானதாக உள்ளது என்றார். ஏனென்றால் தாம் இந்த மூவரையும் தனியாக மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும். அவர்களில் இருவர் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியும் என்றாலும்,  எனது மகள் பாத்திமாவை சற்று கூடுதலாகக்  கண்காணிக்க வேண்டும். அவள் கூட்டத்தைக் கண்டால் கொஞ்சம் பயப்படுவாள் என்பதால், எப்போதும் தாம் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பீடோர், தேசிய மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த போது சுஸானா கூறினார்.
நன்றி.  FMT.

www.myvelicham.com / Face book / TIK TOK /YOU TUBE/