மலேசிய வீராங்கனைகள்
In the 2025 Thailand Open, Malaysia’s Pearly Tan and M. Thinaah defeated China’s Chen Qing Chen and Jia Yi Fan with a score of 21-14, 21-11 to reach the semifinals. Their confidence and focused preparation played a key role in this quick 34-minute victory.

Dated: 17.5.2025 Time: 15 pm News By: Punithai Chandran
தாய் ஓபன் – சீன நாட்டு போட்டியாளர்களை வீழ்த்தி, அரையிறுதிப் போட்டிக்கு பர்லி - எம்.தீனா இரட்டையர் முன்னேறியதுடன், பாங்காக் – மலேசியாவின் முன்னணி பெண்கள் இரட்டையர் ஜோடியான, பேர்டான்-எம். தினா இரட்டையருக்கு, இன்று Nimibutr விளையாட்டரங்கில் நடந்த தாய்லாந்தில் நடைபெற்ற ஓபன் 2025-இன் காலிறுதிப் போட்டியில், சீனாவின் சென் கிங் சென் – வாங் யி லியூவை தோற்கடித்தனர்.
உலகின் நான்காவது இடத்திலுள்ள இந்த ஜோடி 21-14, 21-11 என்ற கணக்கில் தோற்கடிப்பதற்கு 34 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
சீன இரட்டையருக்கு எதிரான போட்டிக்கு தயாராவது குறித்து, தங்களது பயிற்சியாளர்களுடன் விரிவாக விவாதித்தாகக் கூறிய தீனா, இந்தப் போட்டியில் வெல்ல தங்களுக்கு முழு நம்பிக்கை இருந்ததாகக் கூறினார்.
தாங்கள் அடுத்தாக ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரட்டையர் அணிகளுடன் மோதவுள்ளதாகவும் பேர்லி – தீனா கூறினர். தாங்கள் இருவரும் எதிரிகளை சந்திப்பதைவிட, தங்களது பயிற்சியைத்தான் தீவிரமாக மேம்படுத்திக் கொண்டிருப்பதாகவும், தாங்கள் விளையாடும் பொழுது ஒவ்வொரு புள்ளியிலும் அதிகக் கவனத்தைச் செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.
www.myvelicham.com