ஜோ லோவை திரும்ப அழைக்க விரும்பாத தரப்பு

Prime Minister Anwar Ibrahim revealed that certain parties are opposed to bringing fugitive businessman Jho Low back to Malaysia, fearing that his return may expose more corruption linked to the 1MDB scandal. Speaking to Al Jazeera’s 101 East, he emphasized that tackling national governance and eradicating corruption remain his top priorities. Anwar added that the case extends beyond 1MDB and is a tough, ongoing struggle. He refrained from confirming Jho Low’s current location but hinted at movements that raise suspicions.

ஜோ லோவை திரும்ப அழைக்க விரும்பாத தரப்பு

Dated: 17.5.2025    Time: 12.10 pm                                       

By: Punithai Chandran

மோசடி வழக்கில் தொடர்புடைய தம்பியோடிய தொழிலதிபர் லோ டாய்க் ஜோவை மலேசியாவிற்கு திரும்ப அழைத்துவர விரும்பாத சில தரப்பினர் இருக்கின்றனர் என்றும், அவர் திரும்பி வந்தால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும் வாய்ப்பு உள்ளதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தம்முடைய முதல் கடமையாகக் கருதுவது, நாட்டு நிர்வாகப் பிரச்சினை மற்றும் ஊழலை அகற்றுவதே என்று Al-Jazeera’s 101 East  நிகழ்ச்சியில் கூறினார். எனவே, நாட்டில் தமக்கு முக்கியமான காரியங்கள் உள்ளதால், இந்த வழக்கு ஒரு கடினமான போராட்டம் என்றும், இது 1MDB வழக்குடன் ஆரம்பித்து முடிவடையும் விசயமல்ல என்றார்.

ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்று வினவியபோது, தாம் உறுதியாக எதையும் கூற இயலாது என்றும், ஆனால் சில அசைவுகளால்  சந்​தேகிப்பதாகக் கூறிய அவர், இதனைப் பற்றி பேசினால் நிலமை மேலும் சிக்கலாகும் என்றார்.  

www.myvelicham.com