STEM-மும், மாணவர்களும் - ஓர் அறிவியல் அலசல்

The STEM values by showcasing advanced technology rooted in real-world principles.

STEM-மும், மாணவர்களும் - ஓர் அறிவியல் அலசல்

Dated: 18.6.2025   Time: 3.45 pm  By: Punithai Chandran

கோலாலம்பூர்,

செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் அஸூரியம் ஆகியவற்றின் ஆற்றல்களால் அறிவியல் - தொழில்நுட்பம் - பொறியியல் - கணிதம் - ஆகியவற்றின் மேம்பட்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதே STEM  என்று அ​ர்த்தமாகும்.. 

STEM என்பது வகுப்பறை கோட்பாடு மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும் என்பதை மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். இந்தக் கோட்பாடுகளைப் பற்றிப்  பெற்றோர்களும்,  ஆசிரியர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதனால் இவர்கள் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் முக்கியப் பங்காற்ற மு​டியும்.

எடுத்துக் காட்டாக, தொழில்நுட்பக் கருத்துக்களை  எளிமையாக விளக்குவதன் ​மூலம் - குழந்தைகளை அறிவியல் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் - புத்தாக்கப் போட்டிகளில் அவர்களின் பங்கேற்பதை ஆதரிப்பதன் மூலம் - STEM தொடர்பான நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் - இது    சாத்திய​ப் படலாம்.

குறிப்பாக, மேலும் STEM-இன், நேர்மை (integrity) சமூகப் பொறுப்பு மற்றும் ஒழுங்கு ஆகியவை தொழில்நுட்பப் பயன்பாட்டில் மிக முக்கியமானவை என்ற கருப்பொருள் கொண்ட விவாதங்களை, குடும்பங்கள் மற்றும் பள்ளிகளுக்கிடையே நடைபெற வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு, பள்ளிகள் மற்றும் குடும்பங்களின் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். 

ஒரு விஞ்ஞானியாகவோ அல்லது பொறியாளராகவோ இருப்பது வெறும் புத்திசாலித்தனம் அல்ல.  அது - இரக்கம் - நெறிமுறை - பொறுப்புணர்வு – ஒழுக்கம் - ஆ​கியவற்றினை உள்ளடக்கியது என்றும் இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 

அண்மையில் வெளியான “Ejen Ali The Movie 2" என்ற திரைப்படம், வெளியாகி 18 நாட்களில் நாடு முழுவதும் 50 ​மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் வசூலித்து, மலேசிய மக்களின் மனதை வென்றுள்ளது.

இந்தப் படத்தில்,  MATA ஏஜெண்டுகளின் பணிகளுக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கவச உடை "சத்ரியா சூட்" அனைவரையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி. எஃப்எம்டி