ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவது ஏற்புடையதல்ல.
The Malaysian National Youth Council (MBM) opposes the government's plan to raise the retirement age to 65. MBM warns that this move will reduce job opportunities for graduates and negatively impact the socio-economic situation. They pointed out that increasing the retirement age from 55 to 60 in 2013 resulted in the loss of one million jobs for young people.

Dated: 26.5.25 Time: 10.30 am By: Punithai Chandran
ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவது ஏற்புடையதல்ல.
ஓய்வுப் பெறும் வயதை 65-ஆக உயர்த்துவது மலேசியாவிற்குப் பொருந்தாது என்று மலேசிய தேசிய இளைஞர் மன்றம் கூறியுள்ளது. இதனால் மேலும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து விடுமென்று என்று அது எச்சரித்துள்ளது
இளைஞர் மன்றத் தலைவர் முகமட் இசாட் அஃபிஃபி அப்துல் ஹமிட் கூறுகையில், இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் சொந்த மேம்பாட்டில் பாதகமான மற்றும் சமூக பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தும். கடந்த 2013-ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வயதை 55-லிருந்து 60-ஆக உயர்த்தியதன் விளைவாக, சுமார் ஒரு மில்லியன் புதிய பட்டதாரிகள் மற்றும் இளையோர்கள் வேலைகளை இழந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்
தற்போதை சூழலில் மலேசியா, ஆண்டுதோறும் 300,000-க்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்குகிறது. அவர்களில் பலர் நிரந்தர வேலை வாய்ப்பைப் பெற போராடி வருகின்றனர்.
மேலும், பணியிடங்களில் தலைமுறை மாற்றங்களையும் சரிசமமாக நிர்வகிக்க வேண்டும். இது இளைஞர் – வயதானவர்களுக்கு இடையே, குறிப்பாக வாழ்க்கையையும் தொழிலையும் மேம்படுத்திக் கொள்வதற்கு, இளையத் தலைமுறைக்கு நியாயமான பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும். வயதானவர்களுக்கு இங்கு வேலை செய்யும் திறமையிருந்தாலும், இளைஞர்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். இது இளைஞர்களின் உரிமையுமாகும்.
எல்லா வயதானவர்களும் தொடர்ந்து திறம்பட வேலை செய்ய, உடல் ரீதியாக தகுதி பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, நீரிழிவு மற்றும் இதயப் பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
60 வயதுக்கு மேற்பட்ட பலர் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பதால் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து, 65-வது வயதுக்கு உயர்த்துவதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென்ற கருத்துக்கு, பெரித்தா ஹரியான்னின் ஆன்லைன் கருத்துக் கணிப்பில், பெரும்பாலான நெட்டிசன்கள் இந்தக் கருத்தினை நிராகரித்துள்ளனர்.
நன்றி. பெரித்தா ஹரியான்