K.L. Wellness City - இலவச மருத்துவம் - தியானத் திட்டத்தை நடத்​துகிறது

K.L. Wellness City is introducing a 12-month public health program from June to December 2025 with yoga and expert medical talks.

K.L. Wellness City - இலவச மருத்துவம் - தியானத்   திட்டத்தை நடத்​துகிறது

Dated: 25.5.2025     Time 1.30 pm     By: Punithai Chandran

கோலாலம்பூர், K.L. Wellness City - இலவச மருத்துவம் - தியானத்  திட்டத்தை​ நடத்துகிறது 

யோக மற்றும் நிபுணத்துவ மருத்துவர்களின் வி​ளக்க உரைகளுடன் 12 மாதங்கள் பொது சுகாதார திட்டத்தை K.L. Wellness City அறிமுகப்படுத்தவுள்ளது. இது மருத்துவத் துறைகளிலுள்ள நிபுணத்துவம் மற்றும் ஆரோக்கிய நடைமுறை ஆகியவற்றினை ஒருங்கிணைத்து ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

இந்த விளக்கவுரை, எதிர்வரும் ஜூன் 2025 முதல், டிசம்பர் மாதம் வரை KL Wellness City Gallery-யில் நடைபெறும். இத்​திட்டத்தில் பெண் மரு​த்துவ நிபுணர்கள், பெண்களின் ஹார்மோன் சமநிலை, நரம்பியல் மண்டல ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளை மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் யோகா பயிற்சிகளை வழங்குவார்கள்.

மன அழுத்தம், மன உறுதி மற்றும் கவனத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும், அதற்கான தியானப் பயிற்சியும் வழங்கப்படும்.

பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு இப்பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளதால், இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

www.myelicham..com