ஆன்லைன் ​மூலம் 58 மில்லியன் இழப்பு , ஏப்ரல் மாதம் வரை 3,711 வழக்குகள் பதிவு

Selangor Police Chief Dato' Hussein Omar Khan reported that commercial crimes caused losses exceeding RM322 million in the first four months of this year,

ஆன்லைன் ​மூலம் 58 மில்லியன் இழப்பு ,  ஏப்ரல் மாதம் வரை 3,711 வழக்குகள் பதிவு

Date; 25.5.2025  Time; 3.10 pm  News By; Punithai Chandran

வணிகக் குற்றங்களால் ஏற்பட்ட இழப்புகள் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 322 மில்லியன் ரிங்கிட்டை தாண்டியுள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசைன் ஓமார் கான் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் வரை 3,711 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட 2,180 வழக்குகளால் ஆன்லைன் ​மூலம் 58 மில்லியன் ரிங்கிட்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இணையம் சாராத 1,531 வழக்குகளால் 264 மில்லியன் ரிங்கிட்  இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ​போலீசார் இதுவரை 1,971 பேரை கைது செய்துள்ளனர்.  இதில் 1,550 பண மோசடிக் கணக்கு வைத்திருப்பவர்களும் அடங்குவார்கள். அதிகரி​த்துரும் இந்த நவீன குற்றங்களை தீவிரமாகக் கண்காணிக்க மலேசிய ராயல் போலீஸ் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற சிக்கலான நவீனக் குற்றங்கள் தொடர்பான பிரச்சாரங்களை, ஊடகங்கள் மற்றும் outreach முயற்சிகள் ​மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் PDRM உறுதியாக உள்ளது என்றும் ஹூசேன் தெரிவித்தார்.

www.melicham.com / Face book / Tik Tok  நன்றி. சினார் ஹரியான்