அகத்தியர் வேதம் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

The release of the Agathiyar Veda book was held with great pomp.

அகத்தியர் வேதம் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.
அகத்தியர் வேதம் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

Date :14 May 2025 News By: Punithai chandran 

அகத்தியர் அருள் ஞான சபை ஏற்பாட்டில் அகத்தியர் வேதம் என்ற நூல் விழா மிகச் சிறப்பாக கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் ஸ்கோட், கலா மண்டபத்தில்,  கடந்த 12ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று, பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

இந்தப் புத்தகத்தின் பெருமையைப் பற்றி சொல்லில் அளவிட முடியாது. நாம் அனைவரும் போற்றப்படும் மாமுனிவரால் எழுதப்பட்ட அகத்தியர் வேதம் என்ற புத்தகத்தை இந்தியா, பெங்களூரைச் சேர்ந்த வி. எம். ஜெயபாலன் எழுதியுள்ளார். இவர் ஒரு சைவ சிந்தாத்த மருத்தவராகவும் உள்ளார். அதனால், மருத்துவத்தைப் பற்றியும் ஓரிரண்டு வரிகளில் அவர் எழுதியிருப்பது புத்தகத்திற்கு மேலும் பெருகூட்டியிருக்கின்றது. இந்தப் புத்தகத்தை வெளியிட்டதும், அச்சடித்தவரும் திருவாளர் முனுசாமி முத்துச்சாமி அவர்களாவார். இந்தப் புத்தகம் ஆங்கில மொழியிலும் திரு. தர்மராஜு முனுசாமி அவர்களால் மொழிப் பெயர்க்கப்பட்டிருந்ததால், தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளியீடு கண்டது. 

முதல் புத்தகத்தை ஐயா மதிப்பிற்குரிய தமிழ்க் காவலர் ஓம்ஸ் தியாகராஜன் அவர்கள் முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் அகத்தியர் அருள் ஞான சபையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் இந்தப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.  இந்தப் புத்தகத்தை பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள் திரு முத்துச்சாமி, தொலைபேசி எண் 012-3344323 அவர்களிடம் தொடர்புக் கொள்ளலாம். 

இந்த நிகழ்ச்சியில் தொடக்க விழாவின்போது,  மேடையில், தேவாரப் பாடல்கள் மற்றும் அகத்தியர் பாடல்களை பாடியது மேலும் சிறப்பான அம்சத்தைக் கொடுத்தது. 
இந்தப் புத்தகம் செத்தியா ஏர்கோன் ஆதரவிலும், ஒத்துழைப்பிலும்  வெளியீடு கண்டது.

Advertisement : Setia Air cond 012-3344323 

www.myvelicham.com Face book