புவி சார்ந்த அரசியல் விவகாரங்களுக்கு இடையில் அமெரிக்க டாலர் மற்றும் முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் உயர்வு
The Malaysian ringgit opened higher against the US dollar and a basket of other major currencies, including the Japanese Yen, British Pound, and Euro.

Dated: 16.6.2025 Time: 5.30 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
கடுமையான புவி சார்ந்த அரசியல் அபாயங்கள், குறிப்பாக இஸ்ரேல்-ஈரான் இராணுவ மோதல், காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிராகவும், பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் ரிங்கிட்டின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளது. இது நாணயச் சந்தையில் "ரிஸ்க்-ஆஃப் மோட்" (Risk of Mode) என்பதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலை 8 மணிக்கு, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 4.2365/4.2600 ஆக இருந்துள்ள வேளையில், இது வெள்ளிக்கிழமை முடிவில் 4.2435/4.2480 ஆக இருந்ததை விட அதிகமாகும்.
மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பினை பின்வரும் வகையில் காணலாம்:
- ஜப்பானிய யென்: 2.9448/2.9482 இல் இருந்து 2.9300/2.9467 ஆக உயர்ந்தது.
- பிரிட்டிஷ் பவுண்ட்: 5.7482/5.7543 இல் இருந்து 5.7379/5.7697 ஆக உயர்ந்தது.
- யூரோ: 4.8906/4.8958 இல் இருந்து 4.8872/4.9143 ஆக உயர்ந்தது.
இந்த நிலமையில் கச்சா எண்ணெய் விலையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $75.67- ஆக இருந்து வருகிறது.
நன்றி. எஃப்என்டி