கார் கழுவும் ஊழியர் ஓ.யூ.ஜி பார்க்லேன் அடுக்குமாடியில், காரை ஓட்டிச்சென்றபோது விபத்து

An Afghan car wash worker was severely injured after the customer's Toyota Camry he was driving plunged from the third floor of OUG Parklane apartment.

கார் கழுவும் ஊழியர் ஓ.யூ.ஜி பார்க்லேன் அடுக்குமாடியில், காரை ஓட்டிச்சென்றபோது விபத்து

Dated: 16.6.2025   Time: 5.00 ​pm  By: Punithai Chandran

கோலாலம்பூர்

ஓல்ட் கிள்ளான் ரோடு, ஓ.யூ.ஜி பார்க்லேன் (O.U.G. Parklane) அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கார் கழுவும் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்துள்ளது..

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அந்த ஊழியர், டொயோட்டா கேம்ரி காரை கழுவியப் பின்னர், அதனை ஓட்டிச் சென்றபோது, தவறுதலாக accelerators மிதித்ததால் சுவரை இடித்துக்கொண்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த வாகனம் குடியிருப்பு கட்டிடத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்கள் மீதும் விழுந்துள்ளது.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு (JSPT) தலைவர் உதவி ஆணையர் முகமட் சம்சுரி முகமட் இசா,  கார் கழுவும் ஊழியர், வாடிக்கையாளரின் வாகனத்தை கழுவிய பிறகு நிறுத்தும் போது கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த ஊழியர் மேல் சிகிச்சைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (UMMC) கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம் பிரிவு 43(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

நன்றி. என்எஸ்என்.