Rini தமிழ்ப்பள்ளி தங்கப் பதக்கம் வென்று - சாதனை
SRJKT Rini won the gold medal at the Tamil school - Achieved success.

Date : 15 May 2025 News By: Punithai Chandran
சர்வதேச அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் போட்டி (ISTEC 2025) இந்தோனேசியா, பாலியில் மே 8 முதல் 11 வரை நடைபெற்றது. சுருக்கமாக சமர்ப்பிக்கப்பட்ட 700 ஆய்வுகளில், 60 அணிகள் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மலேசியாவைப் பிரதிநிதித்து சர்வதேச அரங்கில், நம் நாட்டின் தேசிய வகை தமிழ்ப்பள்ளியான லாடாங் ரினி, தங்கப் பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளது. இந்தச் சாதனைத் திட்டத்தின் தலைப்பு “நுண்ணுயிர் ரசவாதம்” என்பதாகும்.
சர்வதேச தொழில்முறை நடுவர்கள் குழுவால், இந்த ஆய்வு பரிசீலிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே இப்பள்ளிக்குக் கிடைத்த புகழ் என்றே கூற வேண்டும்.
இதற்காகப் அல்லும் பகலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய மாணவர்கள் ஜெயேஷ் ராம் த/பெ முத்து குமரன் மற்றும் இதற்கு ஆதரவாகவும், பொறுப்பாகவும் இருந்த ஆசிரியர் MS யோகேஸ்வர் த/பெ ரஜேஸ்பரன் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கதாகும். .
அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள், GPK-க்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் LPS உறுப்பினர்கள், குறிப்பாக பெற்றோருக்கும் ஆகியோருக்கு தமது வாழ்த்துக்களை கூறியுதுடன், இவர்களின் ஆதரவில்தான் இந்த சாதனை,
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி எஸ். தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
இந்த வெற்றி SRJK(T) Ladng Rini-க்கு பள்ளிக்கு வலுவான ஒரு படிக்கல்லாக இருக்கட்டும்! வாழ்த்துக்கள்.