மலாய் பெற்றோர்கள், சீனப் பள்ளிகளையே விரும்புகின்றனர்
Malay parents prefer Chinese schools, research says.

Date : 15 May 2025 News By: Punithai Chandran
சீன மொழிப் பள்ளிகளை விட, தேசிய பள்ளிகளின் கல்வித் தரம் சிறந்து இருந்தால், ல பெற்றோர்கள் தேசியப் பள்ளிகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று ISEAS-Yosof Ishak நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனப் பள்ளிகளில் சிறந்த கல்வித் தரம் இருப்பதால், அதிகமான மலாய் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சீனப் பள்ளிகளில் பதிவுச் செய்ய விரும்புகின்றனர். இதனால், மலாய் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த 929 மலாய்ப் பெற்றோர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில்
பார்க்கும்பொழுது, 60% சதவிகித்தனர் அளித்த பதில் என்னவென்றால், சீனப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மட்டுமே வழங்கினாலும்கூட, அப்பள்ளிகளில் ஒழுக்கம், கல்வியின் தரம், கற்றலின் செயல்திறன் மற்றும் அதன் மதிப்பிடு ஆகியவற்றில் சிறந்துள்ளது என்று பதிலுளித்துள்ளனர்.
இது தேசியப் பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்து வருவதைக் காட்டுகின்றது என்று கூறப்படுகிறது.\
Thank you FMT