பந்திங் சுங்கை புவாயாவில் 41 லட்சம் ரிங்கிட் செலவில் மின் தகன மையம்
The groundbreaking ceremony for a 41 million Ringgit electric crematorium was held at the Mukim Jugra Bandar Hindu Cemetery in Banting Sungai Buaya. The project will include a hall, public toilets, parking for vehicles, and three cremation machines. It is expected to be completed by the end of 2026.
Dated: 28.5.2025 Time: 11.30 am By: Mani Venthan
ஆட்சிக்குழு உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்
பந்திங் ஜாலான் செர்டாங் பெலா சுங்கை புவாயாவில் அமைந்திருக்கும் முக்கிம் ஜூக்ரா பண்டார் இந்து மயானத்தில் 41 லட்சத்து 69 ஆயிரத்து 500 ரிங்கிட் செலவில் மின் தகன மைய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் அதிகாரப்பூர்வமாக நடந்தது.
நேற்று கோல லங்காட் ரிம்பாயு குவாசைட் வர்த்தக பேராங்காடியில் உள்ள குவாய் அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மின் தகன மைய கட்டுமானப் பணிக்கான அதிகாரப்பூர்வ அடிக்கல் நாட்டு விழாவை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் சார்பில், மாநில வர்த்தக முதலீட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தொடக்கி வைத்தார்.
ஆறு ஏக்கர் நிலப்பரப்பை கொண்டிருக்கும், முக்கிம் ஜூக்ரா பண்டார் இந்து மயானத்தில் ஒரு ஏக்கரில் இத்திட்டம் அமையவிருக்கிறது.
கோல லங்காட் நகராண்மைக் கழகத்தால் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தில் சிறிய மண்டபம், பொது கழிப்பறை, மூன்று பேருந்துகள், 25 கார்கள், 30 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்படும். மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பொது வசதிகளையும் இது கொண்டிருக்கும். மேலும் பிரேதங்களை தகனம் செய்வதற்கு மூன்று இயந்திரங்களை பொருத்தப்படவிருப்பதாகவும், இதில் இரண்டு தகன இயந்திரங்கள் தினசரி இயங்கும் என்றும், இன்னொரு தகன இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.