மனிதனும் இறைவனும் பயணம் செய்ய வேண்டும் டாக்டர் பெ.முருகன் 

Man and God must travel, Dr. P. Murugan

மனிதனும் இறைவனும் பயணம் செய்ய வேண்டும் டாக்டர் பெ.முருகன் 
மனிதனும் இறைவனும் பயணம் செய்ய வேண்டும் டாக்டர் பெ.முருகன் 

Date: 27 Feb 2026  News By: Ganapathy

 மனிதனும் இறைவனும் பயணம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பயணத்துக்கு ஒப்பான தொழில் பயணத்தைப் பற்றிய என்னுடைய அனுபவத்தை வெளிச்சம் நேயர்கள் உடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

 என்னுடைய தொழில் பயணத்தின் போது நான் அடைந்த தோல்விகள்,சிரமங்கள், கஷ்டங்கள் அதன் மூலம் பெற்ற அனுபவங்களைப்  பற்றி கூறுகிறேன். முதலில் ஒரு தொழில் செய்வதற்கு பொறுமை மிக மிக அவசியமான ஒன்று. பொறுமைதான் மிகவும் இன்றியமையாத அடிப்படை விஷயமாக நான் நினைக்கிறேன். அப்படிப்பட்ட என் தொழில் பயணத்தில் பல விதமான தோல்விகளுக்கு மத்தியில் வெற்றி பெற்று எப்படி நான் எழுந்து நின்றேன் என்பது பற்றிய உண்மை நிகழ்வுகளையும் நான் அந்தப் பாதையை எப்படி கடந்து வந்தேன் என்பதைப் பற்றிய உண்மையான சாட்சியாகவும் நல்ல டெஸ்ட்டி மணியாகவும் பகிர்ந்து கொள்வதோடு  தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் எடுத்துக்காட்டாக இருக்கும்.

 

 வாழ்க்கையில் பல விதமான அனுபவங்களை நாம் பெறும் பொழுது தான் நமக்கு முதிர்ச்சி கிடைக்கிறது. இந்த முதிர்ச்சியானது நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவும் வகையில் நம்மை மாற்றிவிடும். பள்ளிப்பருவம் முதல் தற்போது இருக்கக்கூடிய நிலை வரை உங்களுக்கு நான் கூற போகிறேன்.

 

நான் சுபஸ்ரீ பட்டில் பிறந்து வளர்ந்தேன். எனது தாய் தந்தையர்கள் மிகவும் நல்லவர்கள். தந்தையாரின் பெயர் பெரியண்ணன், தாயாரின் பெயர் லட்சுமி. உடன்பிறந்தவர்கள் ஐவரும் ஆண்கள்.நான் மூன்றாவது மகனாக பிறந்தேன். வீட்டில் உள்ள அனைவருமே தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவர்கள். எனது கல்வியானது சுபஸ்ரீ போன் என்ற தோட்டத்திலே  துல்சமன் என்ற  தமிழ் பாடசாலையில் கல்வி பயில என்னுடைய தந்தை என்னை சேர்த்தார். தமிழ் பாடசாலைகள் நான் மிகவும் நல்ல முறையில் படித்து வளர்ந்தேன்.

 

எனது செகண்டரி கல்விக்காக சுபசிப் போனில் உள்ள மலாய் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு  நடத்தப்படும் ரிமுவ் வகுப்புமுறையில் LC தேர்வில் மூன்று முறை தோல்வியை தழுவினேன். ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவும் போது எனக்குள் ஒரு அழுத்தமும் வேதனையும் இருந்தது.

தாய் தந்தையின் முகத்தை பார்க்கும்போது கண்ணீர் தான் வரும் நன்றாக படிக்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் ஒரு ஏக்கம் என்னை மீறி எழும்.

 

இருந்த போதிலும் தளராமல் ஈப்போவில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அங்கும் எனக்கு கல்வியில்  சரியான பிடிப்பு இல்லை. தொழில் கல்வியில்  பொறியியல் தொடர்பான கல்வியைப் பயில வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். கார் பழுது பார்த்தல் அது சம்பந்தமான துறையில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் எங்களது தோட்டத்தில் வாழ்ந்த வளர்ந்த சூழ்நிலை தான்

.

 

என்னுடைய  தந்தை என்னுடன் பேசும் பொழுது  உனக்கு பொறியியல் துறையில் ஆர்வம் உள்ளதா? என்று கேட்டார்.அப்போது ஒக்கேசனல் குரூப் FIT யை தவிர  அரசுப்பள்ளிகளில்  அந்தப் படிப்புகள் இல்லை. எப்படி நமது கல்வியை தொடங்குவது என்பது போன்ற எண்ண ஓட்டம் எனக்குள் இருந்தது. அந்த சமயத்தில் தனது ஆசிரியரான ராஜரத்தினம் அவர்களிடம் நான் பேசினேன். நிறைய தமிழ் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பதின் காரணமாக ஏன் நாம் ஒரு தொழிலை ஆரம்பிக்கக் கூடாது என்று வினவினேன். ஏனென்றால் தேர்வு பெற தவறிய அனைத்து மாணவர்களுமே மரம் வெட்டுதல், மரம் நடுதல், போன்ற தோட்ட வேலைகளுக்கு தான் செல்லவேண்டிய நிலைமை அப்போது இருந்தது. எனவே தொழில் ஆரம்பிப்பது மிகவும் கடினம் என்று ஆசிரியர் கூறினார்.

 

இருந்தபோதும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து பிரைமரி இன்ஸ்டியூட் எனும் ஒரு நிறுவனத்தை இபே சாலையில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து துவங்கினேன். அங்கு தேர்வு பெற தவறிய மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு  தொழில் கல்வியை கற்றுக் கொடுத்தோம். குறிப்பாக வெல்டிங் ,கைத்தொழில், கார் பழுது பார்த்தல் ,எஞ்சினியரிங் சம்பந்தமான எல்லாவிதமான தொழில்களையும் கற்றுக் கொடுத்தோம். மூன்று ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு மேல் கல்வியினை  கற்றுக் கொடுத்து  இன்னும் நினைவில் உள்ளது.

 

அப்போது எங்களுக்கு டிப்ளமோ(பட்டைய படிப்பு) சான்றிதழ் கிடைத்தது. அந்த சமயத்தில் என் தந்தை என்னிடம் நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார். நான் அவரிடம் பொறியியல் சம்பந்தமான தொழிலைத்தான் நான் செய்யப் போகிறேன் என்று கூறிய போது அதில் இந்த இடத்திலிருந்து சாத்தியமில்லை என்று கூறினார். உடனே நான் அந்த இடத்தை விட்டும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றால் தான் முன்னேற முடியும் என்ற எண்ணத்தில் கோலாலம்பூர் செல்வதற்கு முடிவு செய்தேன். அதுவரை அது எந்தப் பகுதியில் உள்ளது என்பது கூட தெரியாது சில திரை படங்களில் தான் பார்த்திருக்கிறேன்.

 

 தோட்டத்தில் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு இபே லிருந்து கோலாலம்பூர் சென்றேன். அப்போது என் கையில் இருந்தது வெறும் 20 வெள்ளி மட்டுமே. இபோவில் இருந்து மேடான் கிட் சென்ற போது அங்குள்ள இரண்டு எக்ஸ்பிரஸ் பேருந்துகளை பார்த்தேன். அதுபோன்று உள்ள நான்கு பேருந்துகளை தொடர்ந்து  வழியில் சில இடங்களில் நிறுத்தி நிறுத்தி சென்று பின் இறுதியாக புடுராய் யை அடைந்தேன்.

 

 கையில் உள்ள 20 வெள்ளியை வைத்துக்கொண்டு எனது இரு சக்கர வாகனத்தில் கோலாலம்பூருக்கு செல்ல முடியுமா?என்று யோசித்திருந்தால் என்னால் கோலாலம்பூருக்கு சென்று இருக்க முடியாது. மனதில் இருந்த உறுதி தான் என்னை அங்கு கொண்டு சேர்த்தது.

 

 இதன் பிறகு தான் எனது தொழில் பயண போராட்டம் ஆரம்பமானது. பசி என்றால் என்ன? சோகம் என்றால் என்ன?சுகம் என்பது என்ன? என எனக்கு தெரிய ஆரம்பித்தது.  தாய் ,தந்தையர் உடன்பிறப்புகளுடன் ,உற்றார் உறவுகளோடு இருந்த சுகம் இனிமையானது.தனியாக வந்த போது தான் அது எனக்கு தெரிந்தது.

 

நான் எங்கே போவது? எப்படி தலை சாய்ப்பது  என்று யோசித்தேன்.  என்ன செய்வது என்று எனக்குள் ஒருவிதமான பயம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றேன். அவரிடம் நான் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளேன் என்று கூறினேன். சரி நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர் வினவினார். அதற்கு நான் அவரிடம் தமிழர்கள் இருக்கக்கூடிய பகுதி ஏதாவது உள்ளதா? இல்லை என்றால் கோயில் உள்ளதா? என்று கேட்டேன்.

இங்கிருந்து ஜனாங்கிளாம என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு கம்போ காந்தி  என்ற இடத்தில் தமிழர்கள் உள்ளார்கள் என்றார். அந்தப் பகுதிக்கு சென்ற போதுதான் அது ஒரு மிக பெரிய அறை இருந்தது.அங்கு இருந்தவர்கள் அனைவரும் மலாய் காரர்கள் மற்றும் தமிழர்கள். இங்கிருந்த அனைத்து வீடுகளுமே தகரத்தால் போர்த்தப்பட்ட குடிசைகள் பார்ப்பதற்கு எனக்கு சற்று பயமாக தான் இருந்தது. நேரக் கணக்கு படி தான் அங்கு தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள். மின்சாரத்திற்கு ஒரு ஜென் செட்டும் இருந்தது.  ஒரு மிகப்பெரிய நகரத்தில் வாழ்க்கை முறை இப்படி உள்ளதா என்றும் பயந்தேன்.

 

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இரவு உணவுக்காக என்ன செய்வது என்று தேடும் போது அங்கு ரோட்டோரத்தில் ஒருவர் சப்பாத்தி விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று இரவு உணவை அருந்திவிட்டு இரவு உறங்குவதற்கு ஏதாவது இடம் கிடைக்குமா என்று கேட்டேன். அவர் அப்படிப்பட்ட இடம் இங்கு ஏதும் இல்லை நீங்கள் இன்றிரவு எங்கள் வீட்டில் வந்து தங்கும்படி கூறினார். அப்போது தான் தமிழர்களின் உபசரிக்கும் பாங்கு என்னை வியக்கவைத்தது தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என என் மனம் கூறியது.

 

 உண்மைக்கும் சத்தியத்திற்கும் என்றும் அழிவு கிடையாது. இதுபோன்ற மனித உருவங்களில் கடவுள் வந்து உதவி செய்கிறார். அவர் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று நல்லவிதமாக உபசரித்தார்.அதை என்னால் என்றுமே மறக்க முடியாது. தொழிலில் வெற்றிகரமாக இருக்கிறேன் என்றால் அதற்கு எனக்கு ஆரம்ப காலத்தில் இதுபோல பல சின்ன சின்ன உதவிகளை செய்தவர்களும் ஒரு காரணம் என்று நான் கூறுவேன்.

 

 கல்வி என்பது முக்கியம் . அதைவிட தொழில் செய்வதற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் நமது அனுபவம் அவர்கள் கூறும் அனுபவம் இவற்றை எல்லாம் கேட்கும் போது அதிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு அறிவு மிக மிக முக்கியமானது. ஒரு பாறை எப்படி செதுக்கப்பட்டு ஒரு அழகான வடிவம் பெற்று தெரிகிறதோ அது போல் என்னுடைய தொழில் பயணத்தில் தொழில் வாழ்க்கையில் பல நண்பர்களுடைய அறிவுரை, அனுபவம் மூலம் நான் இந்த அளவுக்கு உயர்ந்து உள்ளேன்.

 

 டன்லப்பில் முதல் முதலாக பணிபுரிந்தேன். கோலாம்பூர் பற்றி அனைத்து விதமான விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையின் காரணமாக நான் போஸ்ட்மேன் ஆக பணிபுரிந்தேன். எந்த இடத்திற்கு எந்த கடிதத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் ஒவ்வொரு நாளும்  பணி புரிந்துள்ளேன். சில சமயங்களில் என்னை வசை பாடியவர்களும் உண்டு.மலாய் மற்றும் தமிழ் மட்டுமே எனக்குத் தெரியும் ஆங்கிலம் தெரியாது.

 

அண்ணா கூறிய பொன்மொழியில் புலம்பெயர்ந்து போன தமிழர்கள் அங்குள்ள தேசத்தின் தேசிய மொழியை கற்றுக் கொண்டால் நிச்சயமாக வாழ்க்கையில் நீந்தி விடலாம். உங்கள் தாய்மொழியை உங்கள் வீட்டில் பேசுங்கள் என்றார். அதுபோலவே நான் மலாய் மொழியிலும் மேலும் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு எனது தொழில் பயணத்தை ஆரம்பித்தேன்.

 

ஐந்தாண்டுகள் கோலாலம்பூரில் இருந்து அனைத்து விஷயங்களையும் நான் கற்றுக்கொண்டது என் தொழிலுக்கு மிகவும்  உறுதுணையாக இருந்தது. நல்ல நண்பர்களின் நட்பு கிடைத்தது. ஒரு தேனீ எப்படி பல மலர்களில் இருந்து தேனை சேகரித்து  தேன் கூட்டில் சேமிக்கும் வைக்கிறதோ அது போலத்தான் நான் சேகரித்த அனைத்து விஷயங்களும் என்னுடைய தொழிலுக்கு மூலமாக அமைந்தது.

 

பிறகு எனது தோட்டத்தில் ஒரு கொரியர் கம்பெனியை என் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஆரம்பித்தோம். தொழில் வெற்றிகரமாக சென்றது. மேலும் பருப்பு வகைகள் தானியங்கள் இவற்றை எல்லாம் விற்பதற்காக பவுடர் போன்ற பொருட்களை வாங்குவதற்காக வெளிநாடு வரை சென்று அவற்றை இறக்குமதியும் செய்து தொழில் நடத்தினேன்.

 

 எனக்கும் தொழிலில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டது அதற்கு காரணம் வேறு தொழிலைச் செய்ய வேண்டும் என்று எண்ணி  முதலில் செய்த  தொழிலை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்த போது அதில் இருந்து எப்படி நாம் பணத்தினை பெற வேண்டும் என்பதெல்லாம் தெரியாத காரணத்தினால் இழப்பு ஏற்பட்டது.

 

 இதனால் சற்று சிரமத்துக்கு உள்ளானேன். அந்த நேரத்தில் என்னை டாக்ஸி ஓட்டுகிறாயா? என்று  நண்பர் கேட்டார். அப்போதுதான் எனக்கும் திருமணமாகி முதல் குழந்தை பிறந்தது இருந்தது.

 

 அதன் பிறகும் மனம் தளராமல் நான் டேக்ஸி ஓட்டினேன். அன்று செப்பாங்  வானூர்தி நிலையம் கிடையாது. கேலையேயை கிடையாது.சுபாங்  அருகே இஸ்தானா ஹோட்டல் இருந்தது.

 அங்கு நான் காரை ஓட்டினேன். அப்போது ஒரு ஜப்பானிய நண்பர் மிஸ்டர் இடிதாக்கி ஓரிசான் என்பவரை சந்தித்தேன். அவர் மிக்சி கார்பொரேஷன் உடைய ஆசிரியராக இருந்தார். அவரை நான் அழைத்து வரும் போது ஒரு சிறிய உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அவரிடம் என்னைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் கூறினேன். அப்போது அவர் இரவு விருந்துக்கு வருகிறாயா என்று கேட்டார். நானும் சரி என்று பதிலளித்தேன். எனக்குள் ஒரு சந்தேகம் இழையோடியது இவ்வளவு பெரிய நபர் நம்மை ஏன் விருந்துக்கு அழைக்க வேண்டும். கடவுள் இவர் மூலம் நம்மை வழிநடத்துகிறார் என்று ஒரு எண்ணம் என்னுள் தோன்றியது.

 

 அன்று இரவு விருந்து கொடுக்கும் போது அந்த நபர் என்னிடம் பேசியது மிகவும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது டாக்ஸி யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். அதற்கு லைசன்ஸ் மட்டும் போதுமானது. ஆனால் நீங்கள் உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்தும் போது தான் நீங்கள் அனைவரும் முன் வெற்றிகரமாக வலம் வர முடியும் எனக் கூறினார். அதுதான் என்னுடைய வெற்றிக்கு ஓர் முகவரி கொடுத்தது. முதலில் ஒருவர் பாதையை காட்டினார் பின் ஒருவர் வீட்டை கொடுத்தார். மற் ஒருவர் தொழிலில் சேர்த்தார். ஆனால் இவரோ ஒரு தொழிலை நீ செய்யவேண்டும் என்பதை என் மனதுக்குள் ஆழமாகப் பதியச் செய்தார்.

 

இப்போது எனக்கு தொழில் தொடங்குவதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.  வெட்கப்படாமல் உங்களிடம் கூறுகிறேன். சுற்றுச்சூழல் சம்மந்தப்பட்ட சுழல் நீர் தொழில் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். எனவே என்னுடைய டாக்ஸி வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்து விட்டேன். எனக்கு பெருஞ்சயா சிவேஷ்  கம்பெனியை துவங்க நினைத்து போது இது போன்ற நிருவனத்திற்கு  அனுமதி கிடைக்காது என்று கூறினார்கள். ஆனால் கடவுள் கிருபையால் எனக்கு அதற்கான அனுமதியும் கிடைத்தது

.

பிறகு சிறுசிறு பகுதிகளுக்கு சென்று நீரை சுத்தப்படுத்துவதற்கு முன் அங்குள்ள புட்களை எல்லாம் வெட்டி சுத்தப்படுத்தி முழுமையாக அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.

 

நான் பெற்ற இந்த வெற்றிக்கு அடிப்படை காரணமாக இருந்தவர் ஜப்பான்காரர் தான். நல்ல எண்ணம் நல்ல பண்புகள் சிரித்த முகத்துடன் இருக்கும் போது நமக்கு தொழில் மிக நன்றாக நடக்கும் கடவுளும் துணை செய்வார்.

 பொது பல நாடுகளுக்கு குறிப்பாக ஸ்ரீலங்கா, கம்போடியா,  தாய்லாந்து போன்ற  நாடுகளுக்கு சென்று என் தொழிலில் மேலும் பல புதிய உத்திகளை செலுத்தி வெற்றிகரமாக தொழிலை செய்து கொண்டிருக்கிறேன்.

 

 வரும் நாட்களில் இந்த மறுசுழற்சி முறை முறை மிகவும் பெரிய அளவில் பேசப்படும் அதோடு தேவைகளும் அதிகமாகும். எனவே தான் என்னுடைய அறிவுக்கு ஏற்ற வகையிலே அந்தத் துறையில் அடியெடுத்து வைத்து பல வழிகளில் மாற்றங்களும் உத்திகளையும் கொண்டு சீரும் சிறப்புமாக செய்து வருகிறேன்.

 

கிராமத்தில் கேணி நீரை குடித்து வளர்ந்தவன் நகர்ப்புறத்தில் நிறைந்த பகுதிகளில் இந்த மறுசுழற்சி எவ்வளவு முக்கியம் என்பதை நான் புரிந்து வைத்துள்ளேன். அது மட்டுமல்லாமல் நமது உடம்பே ஒரு மறு சுழற்சி முறையில் அமைக்கப்பட்ட ஒரு கூறுதான். சாதாரணமாக நாம் மென்று துப்பும் சூயிங் கம்மை பறவைகளும் விலங்குகளும் உண்டு இறப்பதைப் பார்த்திருப்போம். இது போன்ற கேடுகளை தடுப்பதற்கும்  மறுசுழற்சி முறை பயன்படும். கெட்ட நீரை நாமே மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தி இந்த பூமியை பாதுகாக்க வேண்டும்.பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை  குடிப்போம் என்று  முன்பு காலத்தில் யாராவது கூறினால் சிரித்து இருப்பார்கள். ஆனால் இன்று அந்த தண்ணீரை நாம் விலை கொடுத்து வாங்கி குடிப்பதை கெத்தாக

 நினைக்கிறோம்.

 

 ஒரு மரமானது கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு எவ்வாறு ஆக்சிஜனை நமக்கு கொடுக்கிறதோ அதுபோலதான் இந்த மறு சுழற்சி முறையிலும் நமக்கு நன்மை கிடைக்கிறது. இந்த தொழிலை செய்வதற்கு முன் நான் பல ஆராய்ச்சிகள் செய்ததன் பயனாக தற்போது இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

 

 தமிழ் படித்ததால் தன்னுடைய அறிவும் மழுங்க வில்லை என்றும்  தன் தாய்மொழி என்றுமே தன் ஆராய்ச்சிக்கு உதவி புரிவதோடு உதவிதான் செய்துள்ளது. என் மொழி என்னை எந்த இடத்திலும் தாழ்த்தியதில்லை உயர்த்தி தான் உள்ளது என்றும்  டாக்டர் முருகன் கூறுகிறார்.

 

 எதையும் அடைய வேண்டுமென்றால் நாம் சிரமப்பட வேண்டும்.  எனக்கு விமானம் என்றால் பிடிக்கும்.ஒரு விமானி  கேப்டன் டோன் டெக்ஸ் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியபோது 28 மாடிகள் லிப்டில் வராமல் நீ உன் கால்கள் மூலம் ஏறி வர முடிந்தால் வா. வந்து சந்திக்கலாம் என்றார். அப்போது சிந்தித்துப் பார்த்தேன் 28 மாடிகளையும் நான் நடந்தே கடந்தேன். வியர்வை கொட்டியது. 

அவர் என்னிடம் நன்றாக பேசினார். என் வீட்டுக்கு வந்தார். அவர் வழிகாட்டுதல் படி என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒமேகா ஏரோஸ்பேஸ் என்ற ஒரு பெரிய நிறுவனத்தை  தோற்றிவித்தோம். தமிழ் படித்த நான் பல நாடுகளுக்கும் சென்றேன். வான ஊருதியில் உள்ள பலவகையான பாகங்களைப் பற்றி தெரிந்து கொண்டோம். அவரின் இறப்புக்குப் பின்பு  தொழிலில் சிறிது தொய்வு ஏற்பட்டது எனினும் நான் மீண்டும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினேன். 

 

எதையுமே நினைத்து பலமுறை யோசித்து செய்ய வேண்டும் கடவுளின் அனுகிரகம் இருந்தால் யாரும் நம்மை எதுவும் செய்ய முடியாது அதில் நீங்கள் ஆணித்தரமாக இருக்க வேண்டும். உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி நடை போட உங்களை நீங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.

 

 விமானத்துறை சேவைகளிலும்  எனது நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது அதுமட்டுமல்லாமல்  பெட்ரோல் சம்பந்தப்பட்ட எல்ஜி, மீத்தேன் போன்ற  விற்பதற்காக லாவோஸ் போன்ற நாடுகளுக்கு சென்றேன். சிங்கப்பூர் துபாய் போன்ற நாடுகளுக்கும்  விற்கிறோம். எதுவும் செய்ய முடியாது என்று யாரும் நினைக்கக் கூடாது.  மரங்களை உண்டாக்கி அவற்றின் மூலம் மிக நல்ல காற்றை கொடுக்க முடியுமா? என்பது போன்ற சிந்தனைகளை உடன் நிற்காமல் சோதனை முறையில் முயற்சி செய்து கொண்டு பார்க்கிறோம். உலகம் மிகப் பெரிய திடல். தமிழர்களுக்கு வாய்ப்பில்லை தமிழில் பேசுவதால் வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது.ஏனென்றால் ஒரு தமிழ்ப் பள்ளியில் படித்து தான் நான் இந்த அளவு எனது தொழிலில் வெற்றி அடைந்து உள்ளேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்

.

தமிழர்கள் எப்பொழுதுமே அன்பான குணம் கொண்டவர்கள். எப்போதும் உறவுகளோடு உன்னத தொடர்போடு இருப்பார்கள் ஆபத்து என்றால் தங்கள் உயிரையும் கொடுத்து காப்பார்கள். யாரையும் குறை சொல்லாமல் நீங்கள் முன்னேற நீங்கள் எழுந்து நில்லுங்கள். கடவுள் கிருபையால் நிச்சயமாக வெற்றியை அடைவதற்கு தடையாக எதும் இருக்காது. உறுதுணையாக தான் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 உங்களை மட்டுமே நீங்கள் நம்பி முன்னேற முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை ஊதுபத்தி போல மணம் வீசவேண்டும். நான் முன்னேறியது போலவே நீங்களும் வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றிகளை பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை எனது நன்றியை வெளிச்சம்  வளை தளத்துக்கும் வெளிச்சம் தொலைக்காட்சிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கு எல்லாம் கொடுக்கனும் எனும் பாடல் வரிகளை நினைவூட்டி நிறைவு செய்கிறேன்.

www.myvelicham.com / www.myvelichamtv.com shares 10 people, as you know