உங்கள் வாக்கு பொட்டால் உங்கள் வீட்டில் பக்கத்து ஆற்றில் பாலும் தேனும் ஓடும் என்றார்கள் எங்கே
Your vote brings abundance myvelicham media
Date : 22 May 2026 News By:Ganapathy Krishnasamy
இன்று உலகமே நமது தமிழ் மூத்த மொழியை என்று ஏற்றுக்கொண்ட பிறகும் நமது நாட்டில் ஏன் இந்த ஓரவஞ்சனை. பல முறை குரல் கொடுத்தும் இன்னும் நாம் பிச்சைக்கேட்கும் காலத்தில் தல்லப்பட்டு இருக்கின்றோம். குறிப்பாக பொது போக்கு வரத்து வாகனங்களில் ஏன் நமது தமிழ் மொழிக்கு இடமில்லை.
எங்கே போணார்கள் சூப்பர் நாயகர்கள். எங்களுக்கு உங்கள் வாக்கு பொட்டால் உங்கள் வீட்டில் பக்கத்து ஆற்றில் பாலும் தேனும் ஓடும் என்றார்கள் எங்கே அவர்கள்.
மலேசியாவின் முக்கியமான பேச்சு மொழிகளில் ஒன்றான தமிழ், நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், TBS டெர்மினல் பெர்செபாடு தெலாத்தான் மையங்களில் தமிழ் மொழித் தேர்வு சேர்க்கப்படாதது சமூகத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் என்பது வெறும் மொழி அல்ல — அது மலேசிய இந்தியர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் அடையாளம் என்பவற்றை பிரதிபலிக்கிறது. பொது போக்குவரத்து அமைப்புகளில் தமிழ் இல்லாதது, அந்த சமூகத்தின் புறக்கணிப்பை வெளிப்படுத்துகிறது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான பிரதி அமைச்சர் யூனேஸ்வரன் ராமராஜ் ஆகியோர் இந்த பிரச்சினையை கவனத்தில் கொண்டு, தமிழ் மொழி ஆதரவைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் நீதிக் கட்சி மற்றும் ஜனநாயக செயல் கட்சி தலைவர்களும், குறிப்பாக இந்திய பிரதிநிதிகளும், இந்த பிரச்சினையில் குரல் எழுப்பி உடனடி தீர்வை முன்னெடுக்க வேண்டும் என சமூகத்தின் கோரிக்கை வலியுறுத்துகிறது.
தமிழ் மொழி ஆதரவைச் சேர்ப்பது கடினமான கோரிக்கை அல்ல — அது மலேசியாவின் பன்முக கலாச்சார ஒற்றுமைக்கு மரியாதை மற்றும் பிரதிநிதித்துவம் அளிக்கும் ஒரு அடிப்படை நடவடிக்கை.
நாடு 68ஆம் சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், நமது நாட்டில் இன்னும் நமது மொழிகள் பாதைகளிலும் அரசாங்க விளம்பரங்களிலும் சேர்க்கப்படாதது ஏன்? — கணபதி கிருஷ்ணசாமி, மைவெளிச்சம்



ganapathy







\
