மீவாவின் அன்னையர் தினம்...டத்தோ புருஷோத்தமன்
“தாய்மையைக் கௌரவித்த மீவா... மாணவர்களின் எதிர்காலத்துக்கும் துணை!”
Date : 22 May 2026 News By: GanapathyKrishnasamy
மாசாய் இந்தியச் சமூகத்தின் நம்பிக்கையாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் மாசாய் இந்தியர் சமூகநல மேம்பாட்டுக் கழகம் (மீவா), கடந்த ஞாயிற்றுக்கிழமை மாசாயில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மிக விமரிசையான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, தாய்மார்களைக் கௌரவிக்கும் மனிதநேய நோக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்த நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டினர். மறைந்த டான் ஸ்ரீ எஸ். பாலகிருஷ்ணனின் புதல்வரும் அவரது துணைவியாரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாகச் சமுதாய தலைவர்கள் கே.வி. கவிதா, டத்தோ புவனேஸ்வரன், டாக்டர் பரமசிவம், ராஜாமா, கிரேஸ் ஆகியோர் பங்கேற்று தாய்மார்களைக் கௌரவித்தனர்.
மொத்தம் 20 தாய்மார்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 100 ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அதோடு Rm300.00 ரிங்கிட் மதிப்பிலான சேலைகளும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. இதில் 8 பேர் மீவா கழக உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து முன்னேறிய பெண்கள் தகுதிநிலையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக மீவா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 11 மாணவர்களுக்கு தலா Rm200.00 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மீவா கழகம் இத்தகைய நிகழ்ச்சிகளில் மட்டும் இல்லாமல், மாசாய் பகுதியைச் சுற்றியுள்ள உதவி தேவைப்படும் இந்தியச் சமூக மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவது பாராட்டுக்குரியது. ஏழ்மை நிலையில் வாழும் குடும்பங்கள், தனித்தாய் குடும்பங்கள், கல்வி உதவி தேவைப்படும் மாணவர்கள் எனப் பலருக்கும் இந்த கழகம் தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறது
.
“தாய்மையைக் கௌரவித்த மீவா... மாணவர்களின் எதிர்காலத்துக்கும் துணை!” என்ற உணர்வை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, கலந்து கொண்டோரின் மனதில் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
www.myvelicham.com Share Like Subscriber Month Tagline: Unity Our Strength



ganapathy







\
