பத்துமலை முருகனை உலகமறிய செய்த மாபெரும் மனிதர் டான் ஸ்ரீ டத்தோ நடராஜா.
Tan Sri Datuk Nadaraja is the great man who made Lord Murugan of Batu Caves Malaysia
Date:30 Jan 2026 News By: Ganapathy Krishnasamy
நாணயமான,தொண்டுள்ளம் கொண்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டு கடும் போட்டிகளைச் சந்தித்து நேரம்,பயணம்,சமுதாயம், குடும்பம் பொதுப்பணி என்று எல்லாத்தளத்திலும் வெற்றியடைந்த ஒரு தமிழரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்று ஆர்வம் எழுந்த போது முதலில் உதித்தவர் இவர் தான். பத்துமலை முருகனை உலகமறிய செய்த மாபெரும் மனிதர் இவர். அவர் தான் டான் ஸ்ரீ டத்தோ நடராஜா.
டான்ஸ்ரீ டத்தோ நடராஜா என்றால் இன்று உலக அரங்கில் அனைவருக்கும் பரிச்சயமான ஒருவர். இந்து சமயத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் என்றால் அது மிகையாகாது. பத்துமலை முருகன் சந்நிதியின் முன்பாக அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் அவரது முகத்தில் மழலையின் சிரிப்பு மாறாமல் வரவேற்றார் என்ன ஐயா? என்ன காரணமா வந்தீர் என்றார். சிறிய பேட்டி என்றேன். சரி என்றார். உடனடியாக எனது இன்ஸ்டண்ட் கேள்விகளுக்கானப் பதில்களைத் தந்தார்.

நீங்களும், இந்து சமயமும் சிறு விளக்கம் தாருங்கள்? மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்துவது, ஒழுங்கு படுத்துவது மதமாகும். நமது சமயம் உலகிலுள்ள சமயங்களுக்கு எல்லாம் முன்னோடியான சமயமாகும். மதமாற்றம் குறித்து விளக்கம் அளித்த சுவாமி விவேகானந்தர் ‘நான் இந்துவை இந்துவாக்கப் போகிறேன்’ என்றார். என்னைப் பொறுத்தமட்டில் வழிபாட்டில் ஓர் இந்துவாகவும், மொழியால் தமிழனாகவும், நாட்டால் ஒரு மலேசியக் குடிமகனாகவும் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எப்படி உங்களால் மட்டும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வெற்றியடைய முடிகிறது? “தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
visit:www.myvelicham.com / www.myvelichamtv.com



ganapathy







\
