மலேசியா - ரஷ்யா உறவுகள் நீடிக்கும். டத்தோஸ்ரீ அன்வார்
During a conference titled “Bridging Worlds in a Divided Age” held in Moscow, Malaysian Prime Minister Dato’ Seri Anwar Ibrahim

Dated: 16.5.2025 Time: pm
By: Punithai Chandran
மலேசிய பிரதமர் அன்வார்: “ஒருதலைபபட்ச தீர்மானங்கள் அதிகாரமும் அகந்தையும் காட்டும்”
ஒருசில நாடுகள் எடுத்துவரும் ஒருதலைப் பட்ச தீர்மானங்களை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்பராஹிம் கடுமையாக விமர்சித்தார். இது அதிகாரம் மற்றும் அகந்தையின் வெளிப்பாடு என்றும், சிறிய நாடுகளின் நலன்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சிறிய நாடு, பணக்கார, ஏழை நாடு என்ற வேறுபாடின்றி, அவற்றுக்கெல்லாம் உரிய மதிப்பும் அதிகாரமும் பெற வேண்டுமென்றும், அதனை உலகிற்கு காட்ட வேண்டுமென்றும் மாஸ்கோவில் சர்வதேச உறவுகள் நிறுவனத்தில், “பிளவுபட்ட யுகத்தில் உலகங்களை (MGIMO) இணைத்தல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில், MGIMO பல்கலைக்கழகத்தால், டாக்டர் பட்டம் பெற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இவ்விரு நாடுகளுக்கும் வெவ்வேறு பின்னணிகள், கலாச்சாரங்கள் மற்றும் நாகரீகங்கள் இருந்தாலும் கூட,, ரஷ்யா அதிபர் விளாதிமின் புடின், மலேசியாவிற்கும், தம்முடன் வந்திருந்த பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட வரவேற்பிற்கும், தமது பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்சியாளர்களின் பரிமாற்றத்தை உள்ளடக்கி இருந்ததாக, பிரதமர் தெரிவித்ததுடன், தற்போது 400 ரஷ்ய மாணவர்கள் மலேசியாவில் பயிலுவதாகவும், அதேநேரத்தில் 700 மாணவர்கள் ரஷ்யாவில் உள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், மலேசிய மொழியான மலாய் மொழி ரஷ்யாவின் MGIMO பல்கலைக்கழகம் பாடமாக்கியத்தையும், மலாயா பல்கலைக்கழகுத்தில் ரஷ்ய மொழி கற்பிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார். பெர்னாமா.
நன்றி மலாய் மெயில்