ஜோகூர் மக்களுக்கு சேவை செய்யுங்கள் – அரசியலுக்காக அல்ல: ரீஜெண்ட் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்

In his address, Sultan Ismail emphasized that the primary duty of elected representatives is to serve the people, not to engage in politics. He highlighted the importance of the state legislative assembly as a platform for formulating policies and laws that benefit the public. He also noted that civil servants play a crucial role as intermediaries between the government and the people.

ஜோகூர் மக்களுக்கு சேவை செய்யுங்கள் – அரசியலுக்காக அல்ல: ரீஜெண்ட் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்
ஜோகூர் மக்களுக்கு சேவை செய்யுங்கள் – அரசியலுக்காக அல்ல: ரீஜெண்ட் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்

Dated: 16.5.2025 Time: 4.20 pm  By: Punithai Chandran

இஸ்கந்தார் புத்திரி, மே 16, மக்கள் சேவையே முதன்மையாக இருக்கட்டும். அரசியலுக்கு அல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒழுங்காக, பொறுப்பபாக செ​யல்பட வேண்டுமென்று இன்று நடைபெற்ற ஜோகூர் சட்டமன்றத்தின் 4ஆவது அமர்வில் உரையாற்றிய, ஜோகூர் ரீஜெண்ட் இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலச் சட்டமன்றம் என்பது கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்கும் ஒரு முக்கியத் தளமாக இருப்பதால், மாநிலத்தில் சிவில் சர்வீஸ் அலுவலர்கள் மக்களுக்கு பாலமாக, முக்கியத் தூண்களாக இருக்க வேண்டும். மாநிலம் விரைந்து வளர்ந்து வருவதால், முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உயர்தரம் ம​ற்றும் தொழில்முறை திறனாற்றல் கொண்ட அலுவ​லர்களால் மாநிலம் நிர்வகிக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.  

Darul Ta’zim Permodalan கல்வி நிதியின்வழி, மாநிலத்தின் மூத்த சிவில் சர்வீஸ் அலுவலர்களை, Ivy League மற்றும் அமெரிக்காவின் உலகத் தரத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் தொழிற்துறை மேம்பாட்டு பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தையும் தாம் கொண்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இது தேர்தல் காலம் அல்ல என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோகூர் மாநில மக்களுக்கு சேவை செய்து, மாநிலத்தை ஒரு முன்னேற்றகரமாக மாநிலமாகவும், மற்றவர்கள் மதிக்கின்ற மற்றும் பாராட்டுகின்ற மாநிலமாக உருவாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட அவர், தனிப்பட்ட விவகாரங்களை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்தார்.   

www.myvelicham.com