மலேசிய ஆசிரியர்களுக்குக் கடுமையான சமூக ஊடக மற்றும் ஆடைக் கட்டுப்பாடுகள்

Malaysia's Ministry of Education has rolled out stringent new guidelines for teachers

மலேசிய ஆசிரியர்களுக்குக் கடுமையான சமூக ஊடக மற்றும் ஆடைக் கட்டுப்பாடுகள்

Dated: 7.6.2025   Time: 1.30 pm   By: Punithai Chandran

கல்வி அமைச்சு (MOE)  ஒரு விரிவான நடவடிக்கையினை மேற்கொண்டு, ஆசிரியர்களின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் தொழில்முறை தோற்றம் தொடர்பாக ஒரு விரிவான வழிகாட்டுதல்களை உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தப் புதிய வழிகாட்டுதல்களின்படி,  "அனுமதிக்கப்படாத" செய்திகளை, சமூக ஊடகத் தளங்களில் வெளியிடுவதை ஆசிரியர்களுக்கு வெளிப்படையாகத் தடை செய்துள்ளது. இவை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, "3R தலைப்புகள்" இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான உள்ளடக்கம், அரசியல் கருத்துகள், உள் விவகார நிறுவன விஷயங்கள், எந்தவொரு தூண்டுதல் அல்லது தவறான தகவல், கல்வி நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கக்கூடிய பதிவுகளுக்கு தடை செய்துள்ளது. 

அமைச்சகம் கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது.

உடல் ஒட்டிய ஆடைகள், வெளிப்படும் ஆடைகள், ஒளிரும் பொருட்கள், உடல் வடிவத்தையோ அல்லது உள்ளாடைகளையோ காட்டும் எந்தவொரு ஆடை, "அனாவசிய கவனத்தை ஈர்க்கும்" ஆடைகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த விதிகள், ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு இவை மிகவும் முக்கியமானவை என்று  அமைச்சகம் தெரிவிக்கிறது.

இதுமட்டுமின்றி, கல்வித் துறை தொடர்பான அனைத்து அலுவலகங்களில் பணியாற்றிவரும் அனைத்து அதிகாரிகளும் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.

நன்றி எம்எஸ்என்.