அறிவார்ந்த திறனாற்றலுடைய மக்கள் புலம் பெயர்ந்து விட்டனர்: கோபிந்த் சிங் டியோ.

Intellectually Capable People have migrated: Gobind Singh Deo.

அறிவார்ந்த திறனாற்றலுடைய  மக்கள் புலம் பெயர்ந்து விட்டனர்:  கோபிந்த் சிங் டியோ.

Date : 01 May 2025 News By; Muniandy Krisnhasamy

மலேசியர்களில்  1.86 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இது மக்கள் தொகையில் 5.6 சதவிகிதத்தைப் பிரதிநிதிக்கிறது. 

நாடு சுற்றுச் சூழலுக்கு ஏற்ற அறிவார்ந்த, திறனாற்றல் உடையவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக மடானி அரசு பல யுத்திகளை உருவாக்கியுள்ளது என்று,  42ஆவது பினாங்கு வளாகத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுயபோது இலக்கவியல் (Digital) அமைச்சர் Gobin Singh Dio கூறினார்.

குறைந்த தகுதியுள்ள 60,000 பொறியியலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது மீதான திட்டத்தை அரசு கொண்டுள்ளது என்றும்,  அறிவுசார் தொழிலாளர்களை உருவாக்குவதையும், அதன்வழி நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் அரசுக் கொண்டிருக்கின்றது. இதன்வழி மலேசியர்கள் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் மேலும் முன்னிலை வகிக்க முடியும் என்றும் தெரிவித்தார். 

உள்நாட்டு திறமைகளோடு மட்டுமின்றி, சிறப்பு விசா பாஸ் மூலம் வெளிநாட்டுத் திறமைகளையும் ஈர்ப்பதில் அமைச்சு ஆர்வம் கொண்டுள்ளது. 
சிறப்புப் பொருளாதார மாநிலமாக கருதப்படும் ஜோகூர் - சிங்கப்பூரும் முக்கியத் துறைகளில் 100,000 உயர்தர வேலை வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளது. இதன்வழி ஆண்டுக்கு 15 விழுக்காடு வரி விகிதம் மூலமாக திறமையான அறிவுசார்ந்த தொழிலாளர்களை ஈர்க்கும் என்றும்  கூறினார்.

www.myvelicham.com  - Bernama News