பினாங்கில் உயர்தர குடியிருப்புப் பகுதி, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது
The high-end residential area in Penang has seen significant growth

Date : 02 May 2025 News By: Ganapathy
ஜெலுத்தோங், குளுக்கோர், புலாவ் திக்குஸ், பாயான் பாரு மற்றும் தஞ்சோங் பூங்கா போன்ற முக்கியப் பகுதிகளில் வானுயரக் கட்டிடங்களின் விலை 6% முதல் 12% சதவிகிதம் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் தேவை, முதலீட்டாளர்களின் ஆர்வம், சாதகமான நாணய பரிமாற்றம் மற்றும் எல்ஆர்டி வசதிகள் (LRT) மற்றும் சிலிக்கான் தீவு வளர்ச்சி போன்ற முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களினால், பினாங்கு தீவினை ஒரு புத்தாக்கத்திற்கான உலகளாவிய மையமாக மாறுவதால் இந்த வளர்ச்சிக் கண்டுள்ளதாக டத்தோஸ்ரீ சுந்ததராஜு தெரிவித்தார்.
இதுவொரு பினாங்கு மாநில மக்களுக்கு ஒரு சீரான வாழ்க்கைத் தரத்தை வழங்கும் என்று அனைத்துலக ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FIABDI) மற்றும் பினாங்கு கூட்டமைப்பு பாயால் லெப்பாஸ், பினாங்கு சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சுந்ததராஜு கூறுகிறார்.
www.myvelicham.com / Face Book / Tik Tok / Google