கோழி முட்டை,தேங்காய், இளநீர்களின் விநியோகத்தையும் அதிகரிப்பு

August Increase the supply of chicken eggs

கோழி முட்டை,தேங்காய், இளநீர்களின் விநியோகத்தையும் அதிகரிப்பு

06 May 2025 News By:Ganapathy

    ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மான்யங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து குறைந்த விலையில் தரமான கோழி முட்டைகளின் விநியோகத்தையும் அதிகரிப்பதுடன், அண்மையில் ரமலான் மாதத்தில் விற்கப்பட்டதைப் போல,  பொது மக்களுக்கு அதன் விலையையும் நிலைப்படுத்தும் என்று வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சாட் சாபு முகமது அறிவித்துள்ளார்.

 

ஒரு தட்டு முட்டையின் விலை 5 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது என்றாலும், அது கட்டுப்பாடின்றி உயராது என்று அமைச்சு நம்புவதாக, அமைச்சர் கூறினார். அதேநேரத்தில் சிறப்புத் தர முட்டைகளை அறிமுகப்படுத்த தயாராக இருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 

அதிகரித்துவரும் சீனாவின் தேவைக்கு ஏற்ப உள்ளூர் இளநீர் தேங்காய்கள், குறிப்பாக பாண்டான் தேங்காய் மரங்களை பயிரடப்பட வேண்டும். திரெங்கானு பரந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால் நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் இந்த வகை தேங்காய் மரங்களை பயிரிடப்பட வேண்டும். இது சீனாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப பயிரிடப்பட்டால் ஒரு நல்ல பொருளாதார வாய்ப்புக் கிடைக்கும் என்றும் முகமட் சாபு அறிவித்துள்ளார்.

www.myvelicham.com Face book/ Intg / Tik Tok / Google