பிரிட்டிஷ் பாராளுமன்ற மண்டபத்தில், “வாழ்க தமிழ், வளர்க தமிழ், வெல்க தமிழர்கள்” குரல் ஒலித்தது

In the British Parliament hall, let Tamil grow, may Tamils prosper.'

பிரிட்டிஷ் பாராளுமன்ற மண்டபத்தில், “வாழ்க தமிழ், வளர்க தமிழ், வெல்க தமிழர்கள்”  குரல் ஒலித்தது

Date: 08 July 2025 Time : 7.15 Pm News By:Ganapathy

*வரலாற்று சிறப்புமிக்க நாள் – பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மலேசியத் தமிழர் பெருமை பறைசாற்றிய மேடையில் விருது பெற்றார் "சேவை திலகம்"  உலக பண்பாட்டு இயக்க தலைவர்  தலைவர்  டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கப்பட்டது

லண்டன், ஜூன் 18, 2025: பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் வரலாற்றுச் சுவடுகளில் இன்னொரு தமிழ்ப் பக்கம் பதிக்கப்பட்டது.   உலக பண்பாட்டு இயக்க தலைவர் அயலகத் தொட்ர்புத் தலைவராக, மலேசியத் தமிழர்களின் பெருமையை உலகத் திரையில் உயர்த்தும் வகையில், ஒரு சிறப்பான விருதை பெற்ற பெருமை உலக பண்பாட்டு இயக்க தலைவர் டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன். வழங்கப்பட்டது.

இந்த முக்கியத்துவமிக்க விருது, லண்டன் கிரைடன் துணை மேயர் திரு. முகமது இஸ்லாம் அவர்களின் கரங்களிலிருந்து வழங்கப்பட்டது. இந்த அரிய சந்தர்ப்பத்தில்   உலக பண்பாட்டு இயக்க தலைவர் திலகம் டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர்கள், மலேசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேலும் நான்கு தமிழ்ச் சங்கங்களும் கல்வி அறநிலையங்களும் சேர்ந்த பிரதிநிதிகளை ஒருங்கிணைத்துப் பங்கேற்றார்.

உலகளாவிய அளவில் 24 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பேர், தமிழ்ப்பணி, குடும்ப முன்னேற்றம் மற்றும் சமூகநல சேவைகளுக்காக கௌரவிக்கப்பட்ட இவ்விழா, பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐந்து பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்பு மிகு நட்டாஷா, ரோபின் மெக்டோனல்,  உமா குமரன் மற்றும் பிரிட்டானிய அரசின் உள்ளாட்சி துறை அமைச்சர்  ரீட் ( Steve Reed ) மற்றும் கிரைடன் துணை மேயரும் நேரில் பங்கேற்றதோடு, விழாவின் விமரிசை உணர்வை மேலும் உயர்த்தினர்.

இத்தகைய உயரிய விழாவை, கிரைடன் தமிழ்சங்கத் தலைவர் மதிப்பு மிகு அப்பு தாமோதரன் மற்றும் ஆலந்தூர் கவிஞர் மோகனரங்கம் அறக்கட்டளையின் தலைவர் மதிப்ப்மிகு முனைவர் திரு. பாட்டழன் மற்றும் கோல்ட் சிமித் பல்கழைக்கழக பேராசிரியர் மதிப்பு மிகு சிவா பிள்ளை அவர்களும் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தனர். விழாவின் ஒவ்வொரு கட்டமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

“இந்த கௌரவம், என் தனிப்பட்ட சாதனையாக அல்ல; உலகம் முழுவதும் தமிழுக்காக உயிரைத் தந்து உழைக்கும் ஒவ்வொரு தமிழ்த் தொண்டருக்கும் எனது நெஞ்சார்ந்த சமர்ப்பணம்,” என உணர்ச்சி சோர்ந்த குரலில்  உலக பண்பாட்டு இயக்க தலைவர்  டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன்  வெளிச்சத்திடம் தெரிவித்தார் தெரிவித்தார்.

இவ்விழா, உலக தமிழருக்கே வித்திகரமான தருணமாக பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்ற மண்டபத்தில், “வாழ்க தமிழ், வளர்க தமிழ், வெல்க தமிழர்கள்” என்ற நம்பிக்கையின் குரல் ஒலித்தது. 

 மலேசியா கலைக்கு  பண்பாட்டுக்கு  சேவையை ஆற்றிவரும்
வேளையில் மைவெளிச்சம்.நிறுவனர் கணபதி கிருஷ்ணசாமி  டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.