ஜொகூர் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கபடிப்போட்டி

ஜொகூர் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கபடிப்போட்டி*

ஜொகூர் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கபடிப்போட்டி
ஜொகூர் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கபடிப்போட்டி
ஜொகூர் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கபடிப்போட்டி

ஜொகூர் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கபடிப்போட்டி

கோகி கருணாநிதி

ஜோகூர், 14 ஆகஸ்ட், 

ஜோகூர் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கபடிப்போட்டி நேற்று நடைப்பெற்றது.
இப்போட்டியில் ஆண் குழுவினர் சுமார் 19 அணியினர் பங்கேற்றனர். பல இடைநிலைப்பள்ளிகள் இக்கபடிப்போட்டியில் பங்குகெடுத்தது மிகவும் ஊக்கத்தையளித்தது. ஜோகூர் மாநில கபடிச் சங்கம், ஜோகூர் பாரு மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் ஜோகூர் மாநில விளையாட்டு கழகமும், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இக்கபடிப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றும் ஜோகூர் மாநிலத்தில் கபடிப்போட்டி மிக விமரிசையாக நடைப்பெறுவதற்கு அடிவேராக இருப்பது நமது ஜோகூர் மாநில கபடிச்சங்கம்தான் என்பது மிகையாகாது. கபடிச்சங்க தலைவர் திரு. மு. சந்திரன் ஒத்துழைப்பால் இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கபடிப்போட்டி விளையாட்டு எந்தவொரு தங்குதடையுமின்றி நடைப்பெற்றது. இப்போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 4.00 மணி அளவில் முடிவடைந்தது.  
நான்காம் இடத்தில் ஸ்ரீ ராஹ்மாட் இடைநிலைப்பள்ளியும், மூன்றாம் இடத்தில் தாமான் யுனிவர்சித்தி இடைநிலைப்பள்ளியும், இரண்டாம் நிலையில் டத்தோ ஜபார் இடைநிலைப்பள்ளியும், முதலாம் நிலையில் தாமான் யுனிவர்சித்தி 2 இடைநிலைப்பள்ளியும் வாகை சூடியது. இம்முறை தாமான் யுனிவர்சித்தி 2 இடைநிலைப்பள்ளியே சுழற்க்கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

இத்தருணத்தில் ஜோகூர் மாநில கபடிச்சங்கய் தலைவர் திரு மு. சந்திரன் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்ததோடு அனைவருக்கும் நன்றிமலர்களையும் சமர்ப்பித்தார்.

மேலும் இப்போட்டியானது மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு போட்டிவிளையாட்டாக அமைகின்றது. மேலும், மாணவர்கள் தங்களின் நேரத்ததை நல்ல வழியில் கழிக்க ஒரு சிறந்த கலமாக இக்கபடிப்போட்டி அமைகிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் பங்குகொள்ள ஊக்குவிக்க வேண்டும். கல்வியில் மட்டும் அதிக நாட்டத்தைச் செலுத்தாமல் இது போன்ற போட்டிவிளையாட்டுகளிலும் பங்குப்பெற்று சிறந்து விளங்க வழிவகுக்க வேண்டும். இவற்றால் பாரம்பரிய விளையாட்டான கபடியை அழியாமால் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை வழியுறுத்தினார் திரு மு.சந்திரன்.