2025 ஆசிய சிலம்பக் கோர்வை பொது விருது போட்டி செர்டாங் ஜெயாவில் வெற்றிகரமாக நடைபெற்றது
The 2025 Asian Silambam Open Championship was successfully held from May 9–11 in Serdang Jaya under the leadership of Kalaimamani Guru Anbalagan and Master Anbarasan. Over 300 participants from Malaysia, India, Singapore, and Sri Lanka took part, with Malaysia securing the top position.
Dated: 15.5.2025 Time: 9.40 pm
By: Punithai Chandran
2025 ஆசிய சிலம்பக் கோர்வை பொது விருது போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது
கடந்த மே மாதம் 9,10 & 11-ஆம் தேதிகளில் செர்டாங் ஜெயா உள்ளூர் விளையாட்டரங்கில், கலைமாமணி சிலம்பக் கலை வல்லுநர் கு. அன்பழகன் மற்றும் மாஸ்டர் கு. அன்பரசன் ஆகியோரின் தலைமையில், மலேசிய சிலம்பக் கோர்வை கழக ஏற்பாட்டில், மாபெரும் ஆசிய சிலம்பக் கோர்வை பொது விருது போட்டி 2025, மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்போட்டியில் மலேசியா, சிங்கை, இந்தியா, ஸ்ரீ லங்கா ஆகிய 4 நாடுகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இப்போட்டியில் மலேசியா முதலாம் இடத்தை வென்று வாகை சூடியதோடு, இந்தியா 2-ஆம் இடத்தையும், சிங்கை 3-ஆம் இடத்தையும் பிடித்து வென்றன. ஜோகூர் மாநில சிலம்பக் கோர்வை கழக மாணவர்கள் 25 தங்கம், 24 வெள்ளி, 34 வெண்கலம், 2 சிறந்த மாணவர்களுக்கான பதக்கம் (Sub Senior Female, Senior Male) வென்றது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளைஞர்கள் 'சிலம்பம்' போன்ற பாரம்பரிய தற்காப்புக் கலையிலும், விளையாட்டுத் துறையிலும் அதிக ஆர்வத்துடன் ஈடுப்படுவது நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைக்குரியதாகும். மேலும் இப்போட்டி இனிதே நடந்தேற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்கள், நல்லுள்ளங்களுக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
வாழ்க தமிழ்! வளர்க நம் சிலம்ப கலை!