பியர்லி-தினா ஒப்பந்த முடக்கத்திற்கு விரைவான தீர்வு காண BAM வலியுறுத்தல்
Badminton Association of Malaysia (BAM) President Tengku Zafrul Aziz is pushing for a quick resolution to the contract dispute with women's doubles stars Pearly Tan and M. Thinaah.

Dated: 14.6.2025 Time: 1.30 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
பேட்மிண்டன் வீராங்கனைகளான, பியர்லி டான் மற்றும் எம் தினா பற்றிய ஒப்பந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் ஜோடி தேசிய அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சதுரங்க அசோசியேஷன் ஆஃப் மலேசியா (BAM) தலைவர் தெங்கு ஜாப்ருல் அஜிஸ் வலியுறுத்தினார்.
இதுபோன்ற வீரர்களையும் BAM உடனயே வைத்திருக்க வேண்டும். எனவே, அவர்கள் தொடர்ந்து இருக்க முயற்சி செய்வதற்கு தாம் BAM நிர்வாகத்திடம் பரிந்துரைத்துள்ளதாக, அண்மையில் அகடமி பாட்மிண்டன் மலேசியாவில் தேசிய வீரர்களைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
BAM உடனான தங்களது எதிர்காலம் குறித்து ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்தாலும்கூட, பியர்லியும் தினாவும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடந்த மாதம் தாய்லாந்து ஓபன் பட்டத்தை வென்றனர் மற்றும் அண்மையில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபனில் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
தேசிய அணியில் இருந்து வெளியேறும் வீரர்களை வழிகாட்டி அவர்களை வலுப்படுத்த வேண்டும். அவர்களின் திறமைகளைப் பார்க்க வேண்டும். அதனால் எந்த முடிவை எடுப்பதாலும் தாம் அவசரப்பட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி. எஃப்எம்டி