தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஓர் ஆண்டுக்கு கல்விக் கட்டணச் சலுகை
The Malaysian government announced a one-year education levy exemption for all private learning institutions, effective January 1, 2026.

Dated: 14.6.2025 Time: 12.40 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
மலேசியாவில் இயங்கிவரும் அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், ஒரு வருடத்திற்கான கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை கல்வி நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த விலக்கு மழலையர் பள்ளிகள், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள், தொழிற்கல்வி கல்லூரிகள் மற்றும் உயர்க் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும் என்று அன்வார் கூறினார். கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல நிறுவனங்களின் அழுத்தங்களைக் குறைப்பதற்கு, இந்நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஆதரவைக் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டண விலக்கினால், கல்வி நிறுவனங்கள் தங்களது கற்றல் வளங்கள், கற்பித்தல் ஆகியவற்றினை மேம்படுத்த உதவும். நமது குழந்தைகள் சிறந்த பயிற்சியைப் பெறுவதை உறுதிப்படுத்தவே இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்வழி மாணவர்களின் வெற்றிக்கு வழி வகுக்க முடியும் என்று தேசிய பயிற்சி வார விழா 2025 தொடக்க விழாவில் அவர் அன்வார் பேசியுள்ளார்.
நன்றி. மலாய் மெயில்