PTPTN கடனை திருப்பிச் செலுத்துவதற்கான புதிய சலுகைகள்

The National Higher Education Fund Corporation (PTPTN) has introduced several new initiatives, such as #PTPTNBolehBincang and #PTPTNSediaBantu, to help loan recipients repay their loans.

PTPTN கடனை திருப்பிச் செலுத்துவதற்கான புதிய சலுகைகள்

Dated: 13.6.2025   Time: 12.00 pm  By: Punithai Chandran

கோலாலம்பூர்,

தேசிய உயர்க் கல்வி நிதி நிறுவனம் அதாவது PTPTN கடன் வாங்கியவர்கள், தங்களது கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் வகையில், பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • #PTPTNBolehBincang:

இது, கடன் வாங்கியவர்கள் தங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப, கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை மாற்றியமைக்க அனுமதிக்கிறது.

  • #PTPTNSediaBantu:

இது கடன் வாங்கியவர்களுக்கு எளிதான, வேகமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்கும் வழிகளைத் தெரிவிக்கிறது.

மேலும், கடன் வாங்கியவர்கள் தங்கள் கேள்விகள் அல்லது பிரச்சனைகள் ஏதுமிருந்தால், PTPTN அதிகாரிகளை பின்வரும் ஐந்து வழிகளில் தொடர்பு கொள்ளலாம்:

  1. Care liners PTPTN:

திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் 38 உதவியாளர்கள்.

  1. Lifechat:

PTPTN போர்ட்டலில் (www.ptptn.gov.my) திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

  1. PTPTN Sales Officers:

கைபேசி எண்கள் www.ptptn.gov.my/hubungi-ptptn-இல் கிடைக்கும்.

  1. இ-அடுவான் (e-Aduan):

புகார்கள் அல்லது கேள்விகளுக்கு eaduan.ptptn.gov.my வழியாக​ தொடர்புக் கொள்ளலாம்.

  1. சமூக ஊடகங்கள்:

Facebook PTPTN, Instagram @PTPTNOfficial, X @PTPTNOfficial, மற்றும் Tiktok @PTPTNOfficial. ஆகியவற்றின் ​மூலம் தொடர்பு கொள்ளலாம்

தற்போது, PTPTN தனது சேவைகளை மேம்படுத்தி வருகிறது. myPTPTN செயலி (App Store, Play Store, Huawei App Gallery-இல் கிடைக்கும்) மூலம் கடன் விண்ணப்பம், நிலுவைத் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் திட்டங்களைப் பார்வையிடலாம். இது பணமில்லா கொடுப்பனவுகளையும் ஊக்குவிக்கப்படுகிறது.

நன்றி எ​ஃப்எம்டி